Don't Miss!
- Lifestyle
பாலுடன் இந்த பழங்களை சேர்த்து சாப்பிடுவது உங்களை பல ஆபத்துகளுக்கு ஆளாக்குமாம்... ஜாக்கிரதையா இருங்க!
- News
தமிழகத்தில் 4 லாக்அப் டெத்..! போலீசாருக்கு வர்ம கலை பயிற்சி! தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தகவல்..!
- Finance
மாதம் ரூ.25000 சம்பளமா.. அப்போ நீங்க டாப் 10% எலைட் மக்கள்..!
- Automobiles
சொகுசா இருக்கும்... சூப்பரான லேண்ட் ரோவர் காரை வாங்கிய பிரபல நடிகர்... இவரை உங்களுக்கு யார்னு தெரியுதா?
- Technology
ரூ.20,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 4ஜி ஸ்மார்ட்போன்கள்: இதோ பட்டியல்.!
- Sports
கடைசி நேர திருப்பம்.. சிஎஸ்கேவின் தோல்வியால் தலைவலி.. ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்ற அணிகள் எது??
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யாவின் டான் படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் என்ன சொல்றாங்க பாருங்க!
சென்னை: டாக்டர் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் படம் ரசிகர்களை தியேட்டரில் செம ஹேப்பி ஆக்கி வழி அனுப்பி வைத்துள்ளது.
முதல் பாதி முழுவதும் சிவகார்த்திகேயனின் காமெடி கலந்த ரகளை ரசிகர்களை தியேட்டர்களில் வயிறு குலுங்க சிரிக்க வைக்க, இரண்டாம் பாதியில் வரும் அப்பாவுக்கும் மகனுக்குமான பாசப் போராட்டம் பெற்றவர்களையும், பெரியவர்களையும் சந்தோஷப்படுத்தி உள்ளது.
திரும்பும் பக்கம் எல்லாம் டான் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. ரசிகர்களின் ரியாக்ஷன் என்ன என்ன என்பதை இங்கே பார்ப்போம்.
Don
Review:
சிவகார்த்திகேயன்
டான்
ஆக
பாஸ்
ஆகிவிட்டாரா?
இல்லை
ஃபெயிலா?
டான்
விமர்சனம்
இதோ!

அஜித் ரசிகர்கள் ஆதரவு
அஜித்தின் ஏகன் படத்தில் சாதாரண அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் எதிர்காலமாக மாறி உள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் தொடர்ந்து சிவகார்த்திகேயன் படங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். டான் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள பாசிட்டிவ் விமர்சனங்களை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குநர் ஜெயிச்சிட்டாரு
டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி ஜெயிச்சிட்டாரு.. படம் அருமையா வந்திருக்கு,, ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும் எதிர்பாராத காட்சிகளை வைத்து இயக்குநர் வெற்றி பெற்றுள்ளார். சிவகார்த்திகேயன் டான் படத்தில் காமெடி, நடிப்பு, நடனம், எமோஷன் என அனைத்தையும் கலந்து கட்டி கம்ப்ளீட் பேக்கேஜாக படத்தை கொடுத்துள்ளார் என இந்த ரசிகர் பாராட்டி உள்ளார்.

ரஜினி ரசிகர்கள் வரவேற்பு
சிவகார்த்திகேயனின் டான் படத்தின் இரண்டாம் பாதி முதல் பாதி அளவுக்கு இல்லை என விமர்சனங்கள் எழுந்தாலும், இரண்டாம் பாதியில் அப்பாவுக்கும் மகனுக்குமான அந்த எமோஷனலான காட்சிகள் தான் படத்தின் பலமே என்றும் படம் முழுக்க ரஜினி ரெஃபரன்ஸ் உள்ளது ரஜினி ரசிகர்களை ரொம்பவே குஷியில் ஆழ்த்தி உள்ளது.

கேரளாவிலும் சிவகார்த்திகேயன் கொடி
கேரளாவில் முதல் காட்சியை பார்த்து விட்டு கிளம்பிய பிளாக்பஸ்டர் விமர்சனங்களால் அடுத்தடுத்த காட்சிக்கு அதி வேகமாக டிக்கெட் புக்கிங் ஆரம்பமாகி உள்ளது என்றும் கேரளாவிலும் அதிக ரசிகர்களை டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் பெற்று விடுவார் என்றும் கூறுகின்றனர்.

ஆவரேஜ்
டான் படத்தின் முதல் பகுதியில் வரும் பள்ளி பருவ காட்சிகளில் சிவகார்த்திகேயன் செம யங்காக நடிப்பில் அசத்தி உள்ளார். டான்ஸ் ஆடுவது, காமெடி பண்ணுவது என மொத்த படத்தையும் தாங்கிப் பிடித்துள்ளார். பாடல்கள் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை. எஸ்.ஜே. சூர்யா நடிப்பு ஓகே. இரண்டாம் பாதியில் படம் ரொம்பவே லேக் ஆகி கடுப்பை கிளப்புகிறது. மொத்தத்தில் டான் படம் ஆவரேஜ் தான் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

நெகட்டிவ்
சிவகார்த்திகேயன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா படத்திற்கு மிகப்பெரிய பாசிட்டிவ். பிரியங்கா மோகன் படத்துல நல்லா நடிச்சிருக்காங்க, அனிருத் இசை அட்டகாசம். நெகட்டிவ் என்று பார்த்தால் அதே பழைய பஞ்சாங்கம் தான் கதை. இரண்டாம் பாதி ரொம்பவே லேக் அடிக்குது. மொத்த்தில் ஒரு வாட்டி பார்க்கலாம் அவ்வளவு தான் என டான் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களையும் நெட்டிசன்கள் போட்டு வருகின்றனர்.
-
ராஷ்மிகாவுக்கு இவ்வளவு சின்ன தங்கச்சியா ? அக்காவை போல அவரும் செம க்யூட்..லைக்குகளை அள்ளும் புகைப்படம் !
-
ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் ஸ்கிரிப்ட் வேலையை துவங்கிய செல்வராகவன்... அடுத்தப்படம் கார்த்தியுடனா?
-
ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள் ஸ்பெஷல்.. அனிருத் பண்ண தரமான சம்பவம்.. NTR 30 அறிவிப்பு வந்துடுச்சு!