இரவு நேரத்தில் ரோட்டில் சண்டையிட்ட சிவகார்த்திகேயன் – சூரி...வைரலாகும் வீடியோ

கோவை : சிவகார்த்திகேயனும், சூரியும் நீண்ட கால நண்பர்களாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த காமெடி காம்போவான கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன் உள்ளிட்ட பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகி உள்ளன.

Sivakarthikeyan and Soori fight video goes viral

இந்த காமெடி ஜோடி தற்போது மீண்டும், டான் படத்தின் ஒன்றிணைந்துள்ளது. இப்படத்தின் சூட்டிங் கோவையில் நடந்து வருகிறது. படத்தின் சூட்டிங்கை முடித்த பிறகு, அங்கு இரவு நேரத்தில் இருவரும் பொழுதை கழித்துள்ளனர்.

அப்போது இருவரும் இணைந்து கிரிக்கெட் விளையாடி உள்ளனர். விளையாட்டில் சிவகார்த்திகேயன் அடித்த ஒரு ஷாட் சிக்சரா இல்லையா என இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ரோட்டில் டீன்ஏஜ் பசங்களை போன்று இரண்டு பிஸியான நடிகர்களும் சண்டையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தற்போது இவர்கள் நடித்து வரும் டான் படத்தை லைகா புரோடெக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனும் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், எஸ்.ஜே.சூர்யா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X