பாவம் பராசக்தி.. அப்படியே சிங்க் ஆகுதே.. புது ஜோடியை அண்ணன் தங்கச்சியா மாத்திட்டானுங்களே!
சென்னை: புதுப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக், பாடல்கள், டீசர் என எந்தவொரு அப்டேட் வெளியானாலும் ரசிகர்கள் அதை ஒரு பக்கம் கொண்டாட, ஹேட்டர்கள் அதை வைத்து பக்கா ட்ரோல் மெட்டீரியலாக மாற்றுவதையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். வடிவேலு வெர்ஷன் என பல பாடல்களை மாற்றியமைத்து ட்ரோல் செய்து வந்த நிலையில், புது ஜோடியவே அண்ணன், தங்கச்சியாக மாற்றி செய்துள்ள சேட்டை ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. நவம்பர் 6ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ள நிலையில், நேற்று மாலை அதன் ப்ரோமோ வீடியோவை ஜி.வி. பிரகாஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் ரிலீஸ் செய்தனர்.

"அடி அலையே" என்கிற பாடலை தற்போது "எங்க அண்ணன்" பாடலுடன் அப்படியே மேட்ச் செய்து வீடியோ வெளியிட்டு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அமரனுக்கு பிறகு: சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்ததை படக்குழு கொண்டாடினர். அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இதுவரை ரஜினிகாந்த், விஜய்க்கு அடுத்து அஜித் படம் கூட கோலிவுட்டில் செய்யாத 300 கோடி சாதனையை சிவகார்த்திகேயனின் அமரன் படம் செய்து மாஸ் காட்டியது. அமரன் படத்துக்குப் பிறகு இந்த ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான மதராஸி திரைப்படம் 100 கோடி வசூலை மட்டுமே எட்டியது.

ஜன நாயகன் உடன் மோதும் பராசக்தி: துப்பாக்கி கொடுத்த தளபதி விஜய்யுடனே அடுத்த ஆண்டு பொங்கலுக்கு மோத ரெடியாகி விட்டார் பராசக்தி சிவகார்த்திகேயன். ஜனவரி 9ம் தேதி ஜன நாயகன் வெளியாகவுள்ள நிலையில், ஜனவரி 14ம் தேதி பராசக்தி வெளியாகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் வின்னர் யாராக இருப்பார்? என்கிற கேள்வி தான் தற்போது கோலிவுட்டில் அதிக அதிர்வலைகளை எழுப்பி வருகிறது.
எங்க அண்ணன் பாடல்: ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு முன்னதாக பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில், அந்த படத்தின் பாடல் ப்ரோமோ வெளியான நிலையில், "அடி அலையே" பாடலை அப்படியே மாற்றி சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்ற "எங்க அண்ணன்" பாடலை பொருத்தி எடிட் செய்து பங்கம் பண்ணி வருகின்றனர். சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா ஜோடி அண்ணன், தங்கை போலத்தான் உள்ளது என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். கண்டிப்பாக முழுப் பாடல் வெளியான பின்னர், இந்த ட்ரோல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











