வெங்கட் பிரபு Vs சிவகார்த்திகேயன் திடீர் கூட்டணியில் மாற்றம்.. எஸ்கே இடத்தில் தனுஷ்?
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது ஹாட்ரிக் வெற்றிகளுடன் டாப் கமர்சியல் ஹீரோவாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், 'தாய் கிழவி' பட இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'சேயோன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வர தயாராகி வருகிறது. 'சேயோன்' படத்தை தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார்.
கால்ஷீட் கொடுத்த தலைவலி:
இதற்கான கதை கேட்பு பணிகள், படப்பிடிப்புக்கான அடுத்த கட்ட வேலைகள் நடந்து கொண்டு இருந்தன. ஆனால், தற்போது 'சேயோன்' படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்புகள் மற்றும் பிற படத்தின் கால்ஷூட் பிரச்சனை காரணமாகச் சிவகார்த்திகேயனுக்குக் கடுமையான கால்ஷீட் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் வெங்கட் பிரபுவின் படத்திற்குத் திட்டமிட்டபடி தேதிகளை ஒதுக்க முடியாத சூழ்நிலை உருவானதால், பரஸ்பரம் பேசி அந்தப் புதிய திரைப்படத்தில் இருந்து சிவகார்த்திகேயன் தற்காலிகமாக விலகியதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிரடி காட்டும் வெங்கட் பிரபு: சிவகார்த்திகேயன் விலகியதால் சற்றும் தொய்வடையாத படக்குழு, அந்த பிரம்மாண்ட கதையில் கதாநாயகனாக நடிக்க வைக்க தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத பான்-இந்தியா ஸ்டாரான தனுஷிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளது. இந்த செய்தி வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் உடனடியாகப் பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தியேட்டரில் திருவிழா தான்: இருப்பினும், இந்த மெகா கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் தயாரிப்பு தரப்பில் இருந்து உறுதிப்படுத்தப்படவில்லை. ஒருவேளை இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக அமைந்தால், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.ஸ்டைலான மேக்கிங் மற்றும் ஜாலியான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்களை வழங்குவதில் '2K கிட்ஸ்'களின் ஃபேவரிட் இயக்குநரான வெங்கட் பிரபுவும், அசாத்திய நடிப்பு மற்றும் வணிக ரீதியான மாஸ் கதாபாத்திரங்களில் சிறந்து விளங்கும் தனுஷும் முதன்முறையாக இணைந்தால் நிச்சயமாக இந்த படம் தியேட்டர்கள் திருவிழாவாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications