சிவகார்த்திகேயனுக்காக பொறுத்து பார்த்து பொங்கி எழுந்த வெங்கட் பிரபு?.. என்ன பிளான் தெரியுமா?

சென்னை: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கிட்டத்தட்ட அந்தப் படம் 350 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவா ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்தப் படத்தின் நிலை என்னவென்றே தெரியவில்லை. இந்நிலையில் அதுகுறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

சிவகார்த்திகேயன் இப்போது கோலிவுட்டில் டாப் கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவர். டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்களும் அவரை முதன்முறையாக நூறு கோடி ரூபாய் க்ளப்பில் சேர்த்தது. ஆனால் அடுத்ததாக அவர் நடித்த பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வியை சந்திக்க; சுதாரித்துக்கொண்ட எஸ்.கே. மாவீரன் திரைப்படத்தில் நடித்து தன்னை மீட்டெடுத்துக்கொண்டார். அந்தப் படம் கிட்டத்தட்ட 80 கோடி ரூபாய்வரை வசூலித்தது. அடுத்து வெளியான அயலான் திரைப்படமும் மெகா ஹிட்டாகி நல்ல வசூலை செய்தது.

sivakarthikeyan venkat prabhu amaran


அமரன்: இப்படி ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சிவகார்த்திகேயனை உச்சத்தில் கொண்டு சென்று நிறுத்தியது அமரன் திரைப்படம். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் ஹாசன் தயாரிப்பில் அந்தப் படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. உலகளவில் அந்தப் படம் 350 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் ஓடிடியிலும் படத்துக்கு சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. அமரன் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை விரிவுப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த படங்கள்: அவர் இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்கிறார். இரண்டு படங்களுமே அவரது கரியரில் முக்கியமான படங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்கள் மட்டுமின்றி டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் நடிக்கிறார் அவர். ஏற்கனவே அவரும் சிபியும் இணைந்த டான் படம் மெகா ஹிட்டானதால் இந்தப் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

வெங்கட் பிரபுவுடன் கூட்டணி: இதற்கிடையே ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படம் நடக்கவிருந்தது. ஆனால் அந்த சமயத்தில் விஜய்யின் GOAT படத்தை இயக்க சென்றுவிட்டார் வெங்கட். எஸ்கேவும் அமரனுக்கு சென்றுவிட்டார். தற்போது மீண்டும் அவர்கள் இணைவார்களா என்று ரசிகர்களிடம் கேள்வி எழுந்திருந்தது. மேலும் எஸ்கேவின் நடிப்பில் ஏஜிஎஸ் பேனருக்கு பதிலாக சத்யஜோதி பிலிம்ஸ் பேனரில் வெங்கட் படம் இயக்குவார் என்றும் சில நாட்களாக தகவல்கள் ஓடிக்கொண்டிருந்தன.

வெங்கட்டின் முடிவு: ஆனால் இப்போது புதிய பேச்சு ஒன்று எழுந்திருக்கிறது. அதாவது எஸ்கே புறநானூறு, சிபி சக்கரவர்த்தி படம் என பிஸியாக இருப்பதால் வெங்கட் பிரபு புதிய முடிவு எடுத்திருக்கிறாராம். அதன்படி எப்படியும் சிவா வருவதற்கு தாமதமாகும் என்று தெரிந்துவிட்டதால் அவர் பாலிவுட் பக்கம் செல்ல முடிவு எடுத்திருப்பதாகவும் அக்‌ஷய் குமாரிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கோலிவுட் பச்சிகள் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X