தூசித் தட்டப்படும் பழைய கூட்டணி? இந்த முறையாவது அமையுமா?
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.
கடந்த 2018லேயே இவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் அந்த கூட்டணி பல்வேறு காரணங்களால் தட்டிப் போனது. தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான டாக்டர் படம் சிறப்பான வெற்றியை பெற்றது. இந்தப்படம் திரையரங்குகளில் ரிலீசான நிலையில் வசூல்சாதனை புரிந்துள்ளது.

டான் படத்தின் ரிலீஸ்
இதையடுத்து தற்போது அவர் டான் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன.

மார்ச் 25ல் ரிலீஸ்
படத்தின் பர்ஸ்ட் லுக், பாடல் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரும் மார்ச் 25ம் தேதி படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சிவாவிற்கு ஜோடியாகியுள்ளார் பிரிங்கா மோகன். படத்தில் கல்லூரி மாணவராக நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவாவுடன் இணைந்த ஷிவாங்கி
மேலும் படத்தில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, முனீஷ்காந்த், காளி வெங்கட், பாலா சரவணன், சிவாங்கி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். படத்தில் சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார் குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி.

விக்னேஷ் சிவனுடன் சிவா கூட்டணி?
இந்தப் படத்திற்கு முன்னதாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து விக்னேஷ் சிவன் கூட்டணியில் லைகா புரொடக்ஷன்ஸ் படம் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதற்கான முதல்கட்ட பணிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால் படத்திற்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பட்ஜெட் மிகவும் அதிகமாக இருந்ததாக கூறப்பட்டது.

பின்வாங்கிய லைகா
இதையடுத்து இந்தப் படத்திலிருந்து பின்வாங்கிய லைகா புரொடக்ஷன்ஸ் அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியிடம் அந்த புரொஜக்டை கொடுத்தது. தற்போது படமும் ரிலீசாக உள்ள நிலையில் மீண்டும் சிவகார்த்திகேயன் -விக்னேஷ் சிவன் கூட்டணி உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

பான் இந்தியா படம்
பான் இந்தியா படமாக அந்தப் படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. ரொமாண்டிக் காமெடியாக உருவாகவுள்ள இந்தப் படத்தில் பாலிவுட்டின் ஹீரோயின் நாயகியாக இணையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. லைகா தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை மற்றொரு டாக்டர் படமாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











