சிவகார்த்திகேயனும் விஜய்சேதுபதியும் ஒவ்வொரு புரமோஷனுக்கும் இவ்வளவு காசு வாங்குறாங்களா?

சென்னை: இன்ஸ்டாகிராமில் பெய்டு புரமோஷன் போலவே ட்விட்டரில் வெளியிடப்படும் புதுப்பட புரமோஷனுக்கும் லட்சக் கணக்கில் காசு வசூலிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

'Vijay Sethupathi-க்கும் Sivakarthikeyan-க்கும் ஒரே ஒரு வித்தியாசம் | Anandraj Interview

தெரிந்த நடிகர்களின் புதிய படங்களுக்கு நட்புக்காக இவர்கள் ட்வீட் போடுவதாக ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் தனியாக இதனை ஒரு பார்ட் டைம் ஜாபாகவே மாற்றி வருகின்றனர் என்றும் ஷாக் கொடுக்கின்றனர்.

குறிப்பாக சமீப காலமாக அதிகமாக இது போன்ற ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட புரமோஷன்களை செய்து வரும் விஜய்சேதுபதியும், சிவகார்த்திகேயனும் எவ்வளவு தொகை அதற்காக வசூலிக்கின்றனர் என்பது குறித்து சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட விவாதங்களே கிளம்பி உள்ளன.

நடிகர்களை அழைத்தால்

நடிகர்களை அழைத்தால்

பள்ளி, கல்லூரி மற்றும் பலதரப்பட்ட தனியார் நிகழ்ச்சிகள் என எந்தவொரு நிகழ்ச்சிக்கு நடிகர்களை அழைத்தாலும் அவர்களின் பிரபலத்தை பொறுத்து அவர்களுக்கான தொகை வழங்கப்படும். அதே போலத் தான் ஆன்லைனில் நடிகர்கள் மூலம் நடத்தப்படும் புரமோஷன்களுக்கும் இப்படி தொகை வசூலிக்கப்படுவதாக வழக்கமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

பெய்டு புரமோஷன்

பெய்டு புரமோஷன்

இன்ஸ்டாகிராமில் கண்ட கண்ட அழகு சாதன பொருட்களை நடிகைகள் அவர்களே இதைத் தான் தினமும் பயன்படுத்தி அழகானது போல ரசிகர்களை ஏமாற்றி விற்பதற்கு பெய்டு புரமோஷன் என போட்டுக் கொள்வார்கள். ஆனால், அப்படி போடாமல் வெளியாகும் புரமோஷன்களுக்கும் தனியாக பேமென்ட் வருகிறது என்கிற ரகசியம் தான் தற்போது அம்பலமாகி உள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் வந்தால்

ஃபர்ஸ்ட் லுக் வந்தால்

புதிய படங்களின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர், பாட்டு என எது வந்தாலும் முன்னணி நடிகர்கள் ட்வீட் போட்டு அதனை புரமோட் செய்ய அவர்களின் ரசிகர்கள் நம்ம ஹீரோ ட்வீட் போட்டுட்டாருன்னு போய் பார்த்து அந்த ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்களை டிரெண்டாக்கி விடுகின்றனர்.

சிவகார்த்திகேயனுக்கு எவ்வளவு

சிவகார்த்திகேயனுக்கு எவ்வளவு

நட்பு ரீதியாக இது போன்ற ட்வீட்களை நடிகர்கள் போடுகிறார்கள் என்று பார்த்தால் அதிலும் ஒரு பார்ட் டைம் ஜாப் நடைபெற்று வருகிறதாம். நடிகர் சிவகார்த்திகேயன் ஃபர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்ட சினிமா புரமோஷனுக்கு 5 லட்சம் ரூபாய் வசூலிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய்சேதுபதிக்கும்

விஜய்சேதுபதிக்கும்

சிவகார்த்திகேயனை தொடர்ந்து இது போன்ற டிஜிட்டல் புரமோஷனில் அதிகம் ஈடுபட்டு வருவது நடிகர் விஜய்சேதுபதி தான் என்கின்றனர். சிவகார்த்திகேயனை விட 2 லட்சம் குறைவாக 3 லட்சம் ரூபாயை ஒவ்வொரு புரமோஷனுக்கும் வாங்குகிறாராம். சமீபத்தில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் திட்டம் இரண்டு படத்தின் டீசரையும் விஜய்சேதுபதி வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

அவங்களுக்கு தெரியுமா

அவங்களுக்கு தெரியுமா

ஆனால், நேரடியாக சிவகார்த்திகேயனோ அல்லது விஜய்சேதுபதியோ இப்படி ட்வீட் போடுவதற்கு காசு வாங்குகிறார்களா? என்றால் அது ஒரு பில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. மேலும், அவர்களின் பெயரை பயன்படுத்தி இது போன்ற வசூல் சம்பவம் நடப்பதே அவர்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. நடுவில் இருக்கும் இடைத் தரகர்கள் அவர்களின் பெயரை பயன்படுத்தி சம்பாதிக்கின்றனரா? இல்லை அவர்களுக்குத் தான் இந்த தொகை மொத்தமும் செல்கிறதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X