சிவகார்த்திகேயன்-ஏஆர் முருகதாஸ் கூட்டணி... காத்திருக்கும் தரமான அப்டேட்... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!
சென்னை: கெளதம் கார்த்திக் நடித்துள்ள ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தயாரித்துள்ளார்.
பொன்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது.
இதில், கோலிவுட்டின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், ஆகஸ்ட் 16 1947 இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் இணையும் திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1947 இசை வெளியீட்டு விழா
கெளதம் கார்த்திக் நடிப்பில் N.S பொன்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ஆகஸ்ட் 16 1947. ஏஆர் முருகதாஸ் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கெளதம் கார்த்திக் உடன் குக் வித் கோமாளி புகழ், ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது இந்திய விடுதலை போராட்டத்தை பின்னணியாக வைத்து பீரியட் திரைப்படமாக உருவாகியுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்திருந்தது. இதனைத் தொடர்ந்து 1947 படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுகிறது.

1947 விழாவில் சிவகார்த்திகேயன்
கெளதம் கார்த்திக் சிம்புவுடன் இணைந்து நடித்துள்ள பத்து தல வரும் 30ம் தேதி வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து 1947 திரைப்படமும் அடுத்த மாதம் 7ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், இன்று மாலை நடக்கும் 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் ஏஆர் முருகதாஸ் அழைத்ததால் சிவகார்த்திகேயன் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்கே - ஏஆர் முருகதாஸ் காம்போ
1947 இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மாவீரன் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் கமிட் ஆகியுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது. இதனையடுத்து சிவகார்த்திகேயனின் SK 25 படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

சூப்பர் ஹீரோ சிவகார்த்திகேயன்
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இறுதியாக தர்பார் திரைப்படம் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த இந்தப் படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. மேலும், அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கவிருந்த திரைப்படமும் ட்ராப் ஆனது. இதனால் சைலண்டாக இருந்த ஏஆர் முருகதாஸ் தற்போது சூப்பர் ஹீரோ கதையுடன் பிரம்மாண்டமான படம் இயக்க காத்திருக்கிறாராம். இதில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

எஸ்கே ரசிகர்கள் எதிர்பார்ப்பு
மாவீரன், எஸ்கே 24, அயலான் என அடுத்தடுத்து 3 படங்கள் சிவகார்த்திகேயனின் லைன்-அப்பில் இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ஏஆர் முருகதாஸுடன் இணையவுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி, விஜயகாந்த், அமீர்கான், அஜித், விஜய், சூர்யா என டாப் ஹீரோக்களை இயக்கிய ஏஆர் முருகதாஸ் முதன்முதலாக சிவகார்த்திகேயனுடன் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தையும் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிவா - ஏஆர் முருகதாஸ் இணையும் படம் குறித்து இன்று மாலை அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











