Madharaasi Official Box Office: கிளிக்கான மதராஸி.. வசூலில் ராஜ வேட்டை நடத்தும் SK.. 2வது நாள் வசூல்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள மதராஸி. படத்திற்கு புக்கிங் சுமாராக இருந்தாலும், படத்தின் முதல் காட்சிக்குப் பின்னர் ரசிகர்கள் கொடுத்த விமர்சனம் படத்தை டாப் கியருக்கு தூக்கிவிட்டது என்று கூறும் அளவுக்கு படத்திற்கு புக்கிங் பிச்சுக்கிட்டு போய்க்கொண்டு உள்ளது என்று கூறும் அளவுக்கு படத்தின் வசூல் உள்ளது. படம் முதல் இரண்டு நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 50 கோடிகளை அள்ளியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

Sivakarthikeyan AR Murugadoss Madharaasi Official Box Office Colletion Day 2 Rs 50 Crores In World Wide

படம் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 12 கோடியே 80 லட்சம் கிராஸ் கலெக்‌ஷன் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இரண்டு நாள் கலெக்‌ஷன் குறித்தும் படக்குழு தெரிவித்துள்ளது. இது மாத்திரம் இல்லாமல், படம் முதல் மூன்று நாட்களில் எப்படியும் ரூபாய் 80 கோடிகளில் இருந்து ரூபாய் 90 கோடிகள் வரை வசூலிக்க அதிக வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று கூறப்படுகிறது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை ஸ்ரீ லக்‌ஷி மூவீஸ் தயாரித்துள்ளது. மேலும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ருக்மினி வசந்த், பிஜு மேனன், வித்யூ ஜமால் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்தின் இரண்டாவது நாள் வசூல் எவ்வளவு என்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. படம் முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளால் நிறைந்த இந்த படத்தின் புக்கிங் ஸ்லோவாக இருந்தது. ஆனால் படத்தின் முதல் காட்சி முடிந்து ரசிகர்கள் கொடுத்த ரியாக்‌ஷனுக்குப் பின்னர் படத்தின் புக்கிங் எகிறியது. படத்திற்கு முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 13 கோடிகள் வசூலித்திருக்கும் என்று பாக்ஸ் ஆபீஸ் தகவல்களை வெளியிடும் சாக்நிக் வலைதளம் தோராயக் கணக்கு என்று காலையில் தெரிவித்திருந்தது. ஆனால் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூபாய் 12.8 கோடிகள் கிராஸ் கலெக்‌ஷனாக வசூலித்துள்ளது என்ற தகவலை படக்குழு நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்து அறிவித்துள்ளது. இந்த இரண்டு நாளிலும் படம் ரூபாய் 50 கோடிகள் வசூலித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X