Sivakarthikeyan: விஜய் இடத்தைப் பிடித்த சிவகார்த்திகேயன்... சவால் விட்ட ஏஆர் முருகதாஸ்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக மாவீரன் திரைப்படம் வெளியானது.
இதனைத் தொடர்ந்து பொங்கல் ஸ்பெஷலாக அயலான் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இன்னொரு பக்கம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் SK 23 படத்தின் கதை பற்றி தகவல் கிடைத்துள்ளது.

விஜய் இடத்தைப் பிடித்த சிவகார்த்திகேயன்
சின்ன திரையில் இருந்து சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருகிறார். மாவீரன் வெற்றியைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். இன்னொருபக்கம் 5 ஆண்டுகளாக உருவாகி வரும் அயலான், அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
இதனிடையே சிவகார்த்திகேயனின் 23வது படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் - ஏஆர் முருகதாஸ் கூட்டணி முதன்முறையாக இணைவதால், SK 23 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்தப் படத்துக்காக சிவகார்த்திகேயன் 40 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல், SK 23 ஷூட்டிங் வரும் டிசம்பரில் தொடங்கும் எனவும் தெரிகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் கதை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் கத்தி, துப்பாக்கி, சர்கார் படங்களை இயக்கிய ஏஆர் முருகதாஸ், தளபதி 66-லும் கமிட்டாகியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவிருந்த இந்தப் படம் திடீரென ட்ராப் ஆனது. அதன் பின்னர் தான் தளபதி 66-ல் இயக்குநர் நெல்சன் இணைய, அது பீஸ்ட் படமாக உருவானது.
தளபதி 66ல் இருந்து ஏஆர் முருகதாஸ் விலக, படத்தின் ஸ்க்ரிப்ட் தான் காரணம் என சொல்லப்படுகிறது. ஏஆர் முருகதாஸ் சொன்ன கதை, விஜய்க்கும் சன் பிக்சர்ஸ்க்கும் பிடிக்கவில்லை எனவும், அதனால் அவரை நீக்கியதாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. தளபதி 66 ட்ராப் ஆனது முதலே சில வருடங்களாக படம் இயக்காமல் இருந்தார் ஏஆர் முருகதாஸ்.
ஆனால், விஜய்க்காக எழுதிய தளபதி 66 ஸ்கிரிப்ட்டை, அப்படியே சிவகார்த்திகேயனுக்காக கொஞ்சம் மாற்றியுள்ளார் ஏஆர் முருகதாஸ். இதற்கு சிவகார்த்திகேயனும் தயாரிப்பு நிறுவனமும் ஓக்கே சொல்ல, இப்போது SK 23 ரூட் கிளியராகிவிட்டது. இதனால், தளபதி 66 ட்ராப் ஆனதற்கும் சேர்த்து SK 23ல் மாஸ் காட்டப் போகிறாராம் ஏஆர் முருகதாஸ்.


Click it and Unblock the Notifications











