Sai Pallavi: சாய் பல்லவிக்கு நடந்த துயரம்.. உடன் நின்ற SK.. அமரன் மேடையில் அட்டாக் செய்யப்பட்ட தனுஷ்?

சென்னை: கடந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் வணிக ரீதியாக பெரும் லாபத்தை ஈட்டிய படம் என்றால் அது, சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் தான். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்த படம் தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் ஹிட் படமாக மாறியது. படத்தின் வெற்றி விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Sivakarthikeyan Dhanush Sai Pallavi Amaran 100

கடந்த ஆண்டு தீபாவளிக்கு அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் அமரன். வீர மரணமடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்தை சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்தது. படம் உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூபாய் 70 கோடிகளுக்கு மேல் கிராஸ் கலெக்‌ஷன் செய்து மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசை அமைத்திருந்தார். ஒட்டுமொத்த பட குழுவினரையும் ரசிகர்கள் பாராட்டினார்கள்.

Sivakarthikeyan Dhanush Sai Pallavi Amaran 100

படத்தின் 100வது நாள் வெற்றி விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சாய் பல்லவி பேசும்போது, சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநருக்கும் நன்றி தெரிவித்தார். அதாவது, அவர் பேசும்போது, " என்னை நம்பி, இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. அதே நேரத்தில் படம் முழுவதும் பெண் கதாபாத்திரத்திற்கு ( தனது கதாபாத்திரத்திற்கு) முக்கியத்துவம் கொடுத்ததற்காக நன்றி. எனது கதாபாத்திரத்திற்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்தது என்னை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது" என பேசினார்.

Sivakarthikeyan Dhanush Sai Pallavi Amaran 100

சாய் பல்லவி - SK: அவருக்கு பின் சிவகார்த்திகேயன் பேசும்போது, படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, " சாய் பல்லவி படம் ரிலீஸுக்கு முன்னர் நடைபெற்ற எல்லா புரோமோஷன்களின்போதும் இயக்குநரிடம் தான் நடித்த எல்லா காட்சிகளும் வருமா? தான் நடித்த காட்சிகள் எல்லாம் படத்தில் இருக்கிறதா? இல்லை எடிட்டிங்கில் தூக்கிவிட்டீர்களா? என கேட்டுக் கொண்டே இருந்தார். சாய் பல்லவி, நீங்க நடித்த காட்சிகள் எல்லாம் அப்படியே வரும். அதற்கு ஒப்புதல் அளிக்க கூடிய கதாநாயகர்களும் இங்கே இருக்கிறார்கள். ஏனென்றால் நாங்க கமல் சார் படங்களைப் பார்த்து வளர்ந்தவர்கள்" என பேசினார்.

Sivakarthikeyan Dhanush Sai Pallavi Amaran 100

தனுஷ்: இவரது இந்தப் பேச்சு, இணையத்தில் வேகமாக ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. இது தொடர்பான வீடியோவையும் தகவலையும் பகிரும் ரசிகர்கள், என்.ஜி.கே மற்றும் மாரி 2 படங்களில், சாய் பல்லவி சிறப்பாக நடித்தார். ஆனாலும், அவரது காட்சிகள் எடிட்டிங்கில் தூக்கப்பட்டன. அதாவது எடிட்டிங்கில் வெட்டி வீசப்பட்டன. குறிப்பாக மாரி 2 படத்தில் தனுஷை விட சாய் பல்லவி சிறப்பாக நடித்திருந்தார், அதனால்தான் அவரது காட்சிகள் நீக்கப்பட்டது என ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

Sivakarthikeyan Dhanush Sai Pallavi Amaran 100

வருத்தம்: இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் தனது பேச்சில் மறைமுகமாக தனுஷை அட்டாக் செய்துவிட்டார். ஏற்கனவே இவருக்கும் தனுஷுக்கும் இடையில் உரசல்கள் இருந்து வந்த நிலையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனுஷ் பெயரைக் குறிப்பிடாமல் அவரை மறைமுகமாக அட்டாக் செய்துவிட்டார். என்.ஜி.கே, மாரி 2 படங்கள் சாய் பல்லவிக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது என்று பேசி வருகிறார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Sivakarthikeyan Dhanush Sai Pallavi Amaran 100

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X