வெந்து தணிந்தது காடு சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன்… சிம்புவுக்கு அல்டிமேட் கிஃப்ட்!
சென்னை: சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை சிம்பு, கெளதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.
சிவகார்த்திகேயன் கலந்துகொண்ட வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சஸ் மீட்டில் பல சுவாரஸ்யங்கள் நடந்துள்ளன.

சொல்லி அடித்த சிம்பு
சர்ச்சைகளுக்கு பெயர் போன சிம்பு 'மாநாடு' படத்திற்குப் பின்னர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். மாநாடு சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து, கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் கமிட் ஆனார். இதில், வெந்து தணிந்தது காடு கடந்த 15ம் தேதி வெளியாகி, சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. அலட்டல் இல்லாத சிம்புவின் நடிப்பு பலருக்கும் ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது. அதேபோல் கெளதம் மேனனின் மேக்கிங், ஏஆர் ரஹ்மானின் மியூசிக் என எல்லாமே வெரைட்டியாக ரசிகர்களை கொண்டாட வைத்தது.

சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன்
வெந்து தணிந்தது காடு திரைப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இதுவரை 60 கோடி கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனிடையே வெந்து தணிந்தது காடு படத்தின் சக்சஸ் மீட்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த சக்சஸ் மீட்டில், சிம்பு, இயக்குநர் கெளதம் மேனன் ஆகியோருடன் நடிகர் சிம்புவும் ஸ்பெஷல் கெஸ்ட்டாக கலந்துகொண்டார். சிம்பு, சிவகார்த்திகேயன் இடையே ஈகோ என சொல்லப்பட்ட நிலையில், சிம்பு பட சக்சஸ் மீட்டில் சிவகார்த்திகேயன் பங்கேற்றது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

ஆத்மன் சிம்புவுக்கு அல்டிமேட் கிஃப்ட்
வெந்து தணிந்தது காடு சக்சஸ் மீட்டில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்து அனைவரையும் மிரள வைத்துள்ளார். சிம்புவின் கேரியரில் அவரது ரசிகர்களைக் கடந்து அனைவரும் கொண்டாடிய படமாக வெந்து தணிந்தது காடு அமைந்துள்ளது. இதனையடுத்து சிம்புவுக்கு சுமார் 90 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா வெல்ஃபயர் (Toyota Vellfire) காரை அன்பளிப்பாக கொடுத்து அசரடித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். தயாரிப்பாளரின் இந்த தரமான சம்பவம், வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகம் கண்டிப்பாக உருவாகும் என்பதை கன்ஃபார்ம் செய்துள்ளது.

இயக்குநர் கெளதம் மேனனுக்கு புல்லட்
vஅதேபோல், வெந்து தணிந்தது காடு படத்தின் இயக்குநர் கெளதம் மேனனுக்கும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சூப்பர் கிஃப்ட் கொடுத்துள்ளார். கெளதம் மேனனுக்கு மிகவும் பிடித்த ராயல் என்ஃபீல்ட் புல்லட் பைக்கை பரிசாக கொடுத்துள்ளார் ஐசரி கணேஷ். சுமார் 2 லட்சம் மதிப்புள்ள இந்த புல்லட் பைக், கெளதம் மேனனுக்கு கெத்தாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். கெளதம் மேனனின் படங்களில் எப்போதுமே புல்லட் பைக் கண்டிப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











