எந்திரன் வாடை ஹெவியா வருதே.. அயலான் 3வது சிங்கிள்.. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சூரோ சூரோ எப்படி இருக்கு?

சென்னை: ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள அயலான் திரைப்படம் வரும் ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன் 1 உள்ளிட்ட படங்கள் தமிழில் வெளியாகின்றன. அதே போல விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் நடிப்பில் உருவாகி உள்ள பைலிங்குவல் படமான மெரி கிறிஸ்துமஸ் படமும் வெளியாகிறது.

அயலான் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பே வேறலெவல் சகோ பாடல் வெளியானது. அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஆனால், சமீபத்தில் வெளியான அயலா அயலா பாடல் மற்றும் இன்று வெளியாகி உள்ள சூரோ சூரோ உள்ளிட்ட பாடல்கள் கேட்ட உடனே பெரிதளவில் ஈர்க்காத அளவுக்கே உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Sivakarthikeyan Ayalaan 3rd single Suro Suro out now

அயலான் 3வது சிங்கிள் ரிலீஸ்: இன்று நேற்று நாளை படத்தை ஆர். ரவிக்குமார் கடந்த 2015ம் ஆண்டு இயக்கி இருந்தார். அந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து இருந்தார். இப்பவும் அந்த படத்தில் இடம்பெற்ற "இன்று நேற்று நாளை", "காதலே காதலே" உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. ஆனால், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அயலான் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் எல்லாம் அந்தளவுக்கு ரசிகர்களை கவரும் வகையில் இல்லை என்கிற விமர்சனம் எழுந்துக் கொண்டே இருக்கிறது.

Sivakarthikeyan Ayalaan 3rd single Suro Suro out now

எந்திரன் வாடை வருது: மதன் கார்கி வரிகளில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள சூரோ சூரோ பாடலில் அயன்மேன், தானோஸ் என மார்வெல் கதாபாத்திரங்களை வைத்து வரிகள் உருவாக்கப்பட்டாலும் சூரோ சூரோ என்கிற வரிகள் சுறா படத்தையும் அந்த பாடலின் இசை இரும்பிலே ஒரு இதயம் என எந்திரன் படத்தில் இடம்பெற்ற பாடல் இசை போலவே இருப்பதாக கமெண்ட்டுகள் குவிகின்றன.

அயலான் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த எந்தவொரு பாடலும் ஃபிரெஷ்ஷாக இல்லாததற்கு காரணம் சில ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது தான் என்கின்றனர்.

பொங்கல் போட்டி: ஏலியன் எனும் விஷயம் தான் இந்த படத்திற்கான ஹைப்பை கொஞ்சம் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் நல்லா சார்மாக இருக்கிறார். ரவிக்குமார் இயக்கத்தில் திரைக்கதை சூப்பராக அமைந்து விட்டால் வரும் பொங்கலுக்கு பாக்ஸ் ஆபிஸை அள்ளும் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X