14 வருட திருமண வாழ்க்கை முறிந்தது.. கணவரை பிரிந்த சிவகார்த்திகேயன் பட நடிகை..காரணம் என்ன?

சென்னை: சிவகார்த்திகேயன் பட நடிகை தனது 14 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

மாடல் அழகியான இஷா கோபிகர், நாகார்ஜூனுக்கு ஜோடியாக சந்திரலேகா என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த படத்தைத் தொடர்ந்து பிரசாந்த்திற்கு ஜோடியாக காதல் கவிதை படத்தில் நடித்தார். பின் சுவாச காற்றே, நரசிம்மா, நெஞ்சினிலே உட்பட பல படங்களில் நடித்த இஷா கோபிகருக்கு என்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் உண்டு.

Sivakarthikeyan ayalaan movie actress isha koppikar divorced her husband

அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இஷா கோபிகருக்கு திடீரென தமிழில் மார்கெட் குறைந்ததால், இந்தி பக்கம் சென்றார். அங்கு டாப் நடிகர்களான சல்மான் கான், அஜய் தேவ்கன், கோவிந்தா, சஞ்சய் தத், சுனில் ஷெட்டி, அமிதாப் பச்சன், ஷாருக்கான், அனில் கபூர் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பாலிட்டில் பிரபலமான நடிகையாக மாறினார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி என பல மொழி படங்களில் அதிகமாக என உள்ளார்.

இஷா கோபிகர் காதல் திருமணம்: நடிகை இஷா கோபிகருக்கு படவாய்ப்பு குறைய தொடங்கியுடன் பல படங்களுக்கு ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி வந்தார். இதையடுத்து நடிகை இஷா கோபிகர் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் திம்மி நரங்க் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனார். இருவரும் ஜிம்முக்கு சென்ற போது சந்தித்துக் கொண்டதாகவும், இந்த நட்பு பின் காதலாக மாறியதை அடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. 14 ஆண்டுகால வாழ்க்கையில் இருவரும் இணைந்து பயணம் செய்த நிலையில் தற்போது பிரிந்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Sivakarthikeyan ayalaan movie actress isha koppikar divorced her husband

அயலான்: விவாகரத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி உள்ள நடிகை இஷா கோபிகர், தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் படத்தில் நடித்துள்ளார். கேப்டன் விஜயகாந்துடன் நரசிம்மா படத்திற்கு பிறகு தமிழ் சினிமா பக்கம் வராத இஷா கோபிகர், நீண்ட ஆண்டுக்கு பின் அயலான் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த படம் ஆகும். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவர இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X