கோலிவுட் ‘டான்‘ சிவகார்த்திகேயன்… தயாரிப்பாளர்களின் பேவரைட் ஹீரோவும் இவர் தான்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் இன்று வெளியாகி பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
Recommended Video
இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
சூரி, சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

டான்
இன்று வெளியாகி உள்ள இப்படத்தை காலை முதலே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாலை 4 மணி காட்சிக்கே தியேட்டர் முன் குவிந்த ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து கொண்டாடினர். டான் திரைப்படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

3 கெட்டப்
டான் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று விதமான கெட்டப்பில் நடித்துள்ளார். உடல் எடையை குறைத்து பள்ளி மாணவனாகவும், ட்ரிம் செய்த தாடியோடு கல்லூரி மாணவனாகவும், தாடி மீசையுடன் குடும்பஸ்தனாகவும், 3 வெவ்வேறு கெட்டப்புகளில் அவர் காட்டியிருக்கும் வித்தியாசமும், மெனக்கெடலும் திரையில் பாராட்டை பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயனின் தனி ஸ்டைல்
காதல், காமெடி, சென்டிமெண்ட், காட்சிகள் என பல இடத்தில் ரசிகர்களை ஈர்க்கிறார் சிவகார்த்திகேயன். வழக்கமாக நடனத்தில் தனக்கென தனி ஸ்டைல் வைத்து இவர், அதிலிலும் ஸ்கோர் செய்துள்ளார். பொதுவாக சிவகார்த்திகேயன் என்றாலே குட்டீஸ்களுக்கு மிகவும் மிகவும் அதுவும், டாக்டர் படத்திற்கு பிறகு குட்டீஸ்களின் பேவரைட் ஹீரோவாகிவிட்டார் சிவகார்த்திகேயன்.

கோலிவுட் டான்
அட குட்டீஸ்களுக்கு மட்டும் இல்லப்பா தயாரிப்பாளர்களுக்கும் பிடித்த நடிகராக மாறி உள்ளார் நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயன். சிம்பு, தனுஷ், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களை பின்னுக்கு தள்ளிவிட்டார் சிவகார்த்திகேயன் என்றும், தற்போது கோலிவுட் டான் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் என்று கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர். சம்பளத்திலும் சரி, வியாபாரத்திலும் சரி தற்போது முன்னணியில் உள்ளார் சிவகார்த்திகேயன்.


Click it and Unblock the Notifications











