ஆட்டத்தைத் தொடங்கிய சேயோன்.. OG சிவகார்த்திகேயன் வந்துட்டாரு.. ஷூட்டிங் தொடங்கிடுச்சு மக்களே
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாக உள்ள படம் சேயோன். சிவக்குமார் முருகேசன் இயக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு மே 18ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளது என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன் படி படத்தின் படப்பிடிப்பு தொடங்விட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் அறிவித்துள்ளது.
பராசக்தி படத்திற்குப் பின்னர் சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கமிட் ஆனார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த போது, தனது தயாரிப்பில் தாய் கிழவி படத்தை இயக்கிய இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் படத்தில் கமிட் ஆனார். மேலும் இந்த கதையை உடனே கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறி, படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார்.

சேயோன்: படத்தின் கதை கமல்ஹாசனுக்கும் பிடித்துப் போகவே படத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் வெகு விரைவாக நடக்கத் தொடங்கியது, இப்படி இருக்கையில் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் இதுவரை சிவகார்த்திகேயனை அப்படி பார்த்தது இல்லை என்பதால், ரசிகர்களை அந்த ப்ரோமோ வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக தொடங்கியதாக படக்குழு அறிவித்துள்ளது.
மதுரைக்கு பவர்: இதற்காக மதுரைக்கு வந்தவரை செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அப்போது, " மதுரைக்கு என்று ஒரு பவர் உள்ளது, அந்த பவர் குறையாமல் சேயோன் இருக்கும். இப்படி முழுக்க முழுக்க கிராமப் படம் செய்து வெகு நாட்கள் ஆகிவிட்டது, தற்போது நமது தாய் கிழவி படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசனுடன் இணைந்து படம் பண்ணுகிறேன். அது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்திற்கு சந்தோஷ் நாராயாணன் இசையமைக்கிறார். படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஷே கதாநாயகியாக நடிக்கிறார். நகைச்சுவை நடிகர் பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள். படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது தொடர்பாகவும் படக்குழு புகைப்படம் வெளியிட்டுள்ளது. அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications