சிவகார்த்திகேயனுக்கு ஆண்குழந்தை பிறந்தது... வாழ்த்துமழையில் நனைந்த சிவா
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவதாக ஆண்குழந்தை பிறந்துள்ளது.
Recommended Video
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எமோஷனலாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து அவருக்கு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

எமோஷனல் பதிவு
நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மற்றும் ஒரு மகள் அவருக்கு உள்ள நிலையில் தற்போது அவருக்கு இரண்டாவதாக இன்றைய தினம் ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எமோஷனலான பதிவை வெளியிட்டுள்ளார்.

குவியும் வாழ்த்துக்கள்
18 ஆண்டுகளுக்கு பிறகு தனது அப்பா தன் விரல் பிடித்திருக்கிறார் தனது மகனாக என்று அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவரது நீண்டகால நண்பர் அருண்ராஜா காமராஜ் பூங்கொத்துக்களாலான எமோஜிக்களுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நஸ்ரியா வாழ்த்து
மேலும் ஷிவாங்கி கிருஷ்ணகுமார், பிசி ஸ்ரீராம், ரியாஸ் கே அகமது, ஸ்ரீதர் பிள்ளை, நடிகை நஸ்ரியா, இசையமைப்பாளர் தமன், நடிகர்கள் சதீஷ், எஸ்ஜே சூர்யா, விஷ்ணு விஷால் உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

எமோஷனல் பதிவு
மேலும் நடிகை அதுல்யா ரவியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனிடையே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். நம்மை தோளேற்றி உலகம் காண வைத்த அப்பாவை தோள்தூக்கி கொண்டாட கிடைத்த வரம் மகன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











