Sivakarthikeyan: “சிவகார்த்திகேயன் தான் Cringe No 1..” ப்ளூ சட்டை மாறனிடம் வசமாக சிக்கிய SK!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் டீச்ர் நேற்று மாலை வெளியானது.

சத்யம் தியேட்டரில் நடைபெற்ற அயலான் டீசர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய சிவகார்த்திகேயன் பள்ளிகளில் தமிழ் மீடியம், இங்லீஷ் மீடியம் என்பது வியாபாரத்திற்கு மட்டும் தான் குறிப்பிட்டார்.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் படங்களின் ஆங்கில டைட்டிலை வைத்து அவரிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

 Sivakarthikeyan: Blue Sattai Maran criticized Sivakarthikeyan as Cringe No. 1

சிவகார்த்திகேயன் தான் Cringe No 1
அயலான் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று மாலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் அயலான் ஹீரோ சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார், நடிகர் பால சரவணன், மதன் கார்கி, பாடலாசிரியர் விவேக், தயாரிப்பாளர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதன்பின்னர் படக்குழு சார்பில் அயலான் டீசர் திரையிடப்பட்டது.

இந்திய சினிமாவில் முதல் ஏலியன்ஸ் படமாக உருவான அயலான் டீசர், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏஆர் ரஹ்மானின் பிஜிஎம், மேக்கிங், கிராபிக்ஸ் சீன்ஸ் ஆகியவை அயலான் டீசரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் அயலான் படம் மீதான எதிர்பார்ப்பும் தாறுமாறாக எகிறிபோயுள்ளது. தீபாவளிக்கு வெளியாகவிருந்த இந்தப் படம், அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அயலான் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமாரை வெகுவாக பாராட்டினார். பார்க்க ரொம்ப எளிமையாக உள்ள ரவிக்குமார், இப்படியொரு படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கவில்லை என்பதாக பேசியிருந்தார். அதாவது தமிழ் மீடியம் பள்ளி, கல்லூரியில் படித்த ரவிக்குமார், சயின்ஸ் பிக்‌ஷன் படம் இயக்கும் அளவிற்கு இருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும், அவரது வாசிப்பு பழக்கம் தான் இதற்கு காரணம் எனவும் கூறினார்.

மேலும், பள்ளி, கல்லூரிகளில் தமிழ் மீடியம், இங்லீஷ் மீடியம் என இருப்பதெல்லாம் வியாபாரத்துக்காக தான். மற்றபடி அதற்கும் அறிவுக்கும் சம்பந்தமே கிடையாது என நக்கலாக கமெண்ட் அடித்தார். சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், இதனை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்துள்ளதுடன், அவருக்கு கேள்வியும் எழுப்பியுள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் தன்னை மீண்டும் மீண்டும் Cringe No.1 என நிரூபித்து வருவதாக விமர்சித்துள்ளார்.

இதுபற்றி ப்ளூ சட்டை மாறன் தனது டிவிட்டரில், "CSK's movies with english and other language titles: Marina, Remo, Maan 'Karate', Mr.Local, Hero, Doctor, Don, Prince. இதெல்லாம் வியாபாரத்திற்கு வைக்கப்பட்ட டைட்டிலா அல்லது தமிழ்ப்பற்றா? Proving again and again that you are Cringe No.1." எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது கிரிஞ்ச் சிவகார்த்திகேயனின் படங்களின் டைட்டில் ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் இருக்கின்றன. மெரினா, ரெமோ, மான் கராத்தே, மிஸ்டர் லோக்கல், ஹீரோ, டாக்டர், டான், பிரின்ஸ், இதெல்லாம் வியாபாரத்திற்கா அல்லது தமிழ்ப்பற்றா என கேள்வி எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X