Sivakarthikeyan: “அப்பாடா லியோ கலவரத்துல நம்மள மறந்துட்டாங்க.." சிவகார்த்திகேயனை சீண்டிய ப்ளூ சட்டை
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
லியோ ப்ளாக்பஸ்டர் ஹிட்டா அல்லது தோல்விப் படமா என சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதமே நடந்து வருகிறது.

விஜய்யின் லியோவை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்து விமர்சனம் செய்திருந்தார்.
அதேவேகத்தில் சிவகார்த்திகேயனையும் சீண்டியுள்ள ப்ளூ சட்டை, வடிவேலுவின் மீம்ஸ் போட்டு அவரை கலாய்த்துள்ளார்.
சிவகார்த்திகேயனை சீண்டிய ப்ளூ சட்டை
விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் விமர்சனங்கள் டிவிட்டர் உட்பட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல், லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த பஞ்சாயத்தும் ஃபயர் மோடில் உள்ளது. இந்த பரபரப்புக்கு நடுவில் சிவகார்த்திகேயனை சீண்டியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
சில தினங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் டி இமான் கொடுத்த பேட்டி மிகப் பெரியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதாவது சிவகார்த்திகேயனுடன் இனிமேல் இணையமாட்டேன், அவரது படங்களுக்கு இசையமைக்க வாய்ப்பே இல்லையென கூறியிருந்தார். அதற்கு சிவகார்த்திகேயன் செய்த துரோகம் தான் காரணம் எனவும் டி இமான் கண் கலங்கினார்.
சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை வெளியில் சொல்ல மாட்டேன் எனவும், அது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் டி இமான் பொடிவைத்து பேசியிருந்தார். அவரது இந்த பேட்டி கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பிவிட்டது. டி இமான் தனது மனைவியை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் தான் காரணம் எனவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இதுபற்றி சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து இதுவரை எந்த விளக்கம் கொடுக்கப்படவில்லை.

சிவகார்த்திகேயன் - டி இமான் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்திருந்த நேரத்தில் தான் விஜய்யின் லியோ திரைப்படம் ரிலீஸானது. இதனால் ரசிகர்கள் அனைவரும் டேக் டைவர்ஷன் ஆகி லியோ படம் மீது கவனம் செலுத்தினர். இதனை குறிப்பிடும் விதமாக சிவகார்த்திகேயனை மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். வடிவேலுவின் போஸ்டருடன் ப்ளூ சட்டை போட்டுள்ள இந்த மீம், டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
அதில், "அப்பாடா.. லியோ கலவரத்துல நம்மளை மறந்துட்டாங்க" என சிவகார்த்திகேயன் நிம்மதி பெருமூச்சு விடுவதாக ப்ளூ சட்டை மாறன் கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த கேப்ஷனும் ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்துள்ள வடிவேலுவின் போஸ்டரும் செம்மையாக சிங்க் ஆகியுள்ளது. இதனையடுத்து நெட்டிசன்களும் ப்ளூ சட்டை மாறனின் டிவிட்டர் பதிவில் சிவகார்த்திகேயனை வம்பிழுத்து கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.
முன்னதாக அயலான் டீசர் வெளியீட்டு விழாவில், தமிழ் மீடியம், இங்லீஷ் மீடியத்தில் படிப்பது பற்றி சிவகார்த்திகேயன் பேசியிருந்தார். அப்போதும் அவரை Cringe No.1 என விமர்சித்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். அதாவது "CSK's movies with english and other language titles: Marina, Remo, Maan 'Karate', Mr.Local, Hero, Doctor, Don, Prince. இதெல்லாம் வியாபாரத்திற்கு வைக்கப்பட்ட டைட்டிலா அல்லது தமிழ்ப்பற்றா? Proving again and again that you are Cringe No.1." எனக் குறிப்பிட்டிருந்தார்.


Click it and Unblock the Notifications











