Sivakarthikeyan: "இமானை பத்தி கேப்பாங்க.. பொறுமையா போவோம்” சிவகார்த்திகேயனை பங்கம் செய்த ப்ளூ சட்டை
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை அயலான் ட்ரெய்லர் வெளியாகவுள்ளது. இதனிடையே விஜயகாந்த் உடலுக்கு சிவகார்த்திகேயன் அஞ்சலி செலுத்தாதது சர்ச்சையானது. தற்போது கார்த்தி, சிவகுமார், சூர்யா ஆகியோர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதை அடுத்து, சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
சிவகார்த்திகேயனை பங்கம் செய்த ப்ளூ சட்டை: சின்ன திரையில் இருந்து சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார். சின்ன திரையில் ஜொலித்துக் கொண்டிருந்த சிவகார்த்திகேயனுக்கு மிமிக்ரி தான் பெரிய பலமே. சிவகார்த்திகேயன் தனது மிமிக்ரி நிகழ்ச்சிகளில் ரஜினிகாந்த், விஜயகாந்த், எஸ்ஜே சூர்யா இவர்களது வாய்ஸில் பேசி தான் பிரபலமானார்.

இந்நிலையில், கடந்த வாரம் மறைந்த விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் சிவகார்த்திகேயன் கலந்துகொள்ளவில்லை. ரஜினி, கமல், விஜய், கவுண்டமணி, இளையராஜா உள்ளிட்ட முன்னணி திரை பிரபலங்கள் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர். ஆனால், சிவகார்த்திகேயன் விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.
சிவகார்த்திகேயனை போல அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி, விக்ரம், அருண் விஜய் போன்ற டாப் ஹீரோக்களும் விஜயகாந்த் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை. இவர்கள் அனைவருமே சொல்லி வைத்தது போல படப்பிடிப்பில் இருந்ததால் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை எனக் கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்று முதல் விஜயகாந்த் நினைவிடத்தில் முன்னணி நடிகர்கள் சிலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நேற்று கார்த்தி, சிவகுமாரை தொடர்ந்து இன்று சூர்யா, அருண் விஜய் ஆகியோரும் கேப்டன் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், அயலான் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் இன்னும் செல்லவில்லை. கேப்டன் மில்லர் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக தற்போது துபாய் சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். இதனையடுத்து சிவகார்த்திகேயனை பங்கம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

ஏற்கனவே 'CSK', அதாவது Cringe சிவகார்த்திகேயன் என ட்ரோல் செய்து வருவார் ப்ளூ சட்டை மாறன். தற்போது விஜயகாந்துக்காக ட்வீட் செய்துள்ள அவர், "நமக்கு அழுவற மாதிரி நடிக்கவும் தெரியாது... இந்த ரிப்போர்ட்டர்ஸ் வேற இடம், பொருள் தெரியாம அங்க வச்சி... இமானை பத்தி கேப்பாங்க... வேணாம், படம் ரிலீஸாகி.. பொங்கல் முடியட்டும். பொறுமையா போவோம்" என போஸ்ட் போட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் குறித்து இமான் பேசியது சர்ச்சையானது. இந்தப் பிரச்சினையின் உண்மை என்னவென்பது இதுவரை தெரியாத நிலையில், ப்ளூ சட்டை மாறன் அதனை கிளப்பிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











