ஃபேமிலிய அப்யூஸ் செய்றாங்க.. கலங்கிய சிவகார்த்திகேயன் அம்மா.. ஆடியோ லான்ச்சில் எஸ்கே எமோஷனல்
சென்னை: பராசக்தி படம் ஜனவரி பத்தாம் தேதி வெளியாவதால்; விஜய்யின் ரசிகர்கள் சிவகார்த்திகேயனையும், அவரது ரசிகர்களையும் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வருகிறார்கள். மதுரையில் ஒரு திரையரங்கில் இருந்த பராசக்தி படத்தின் பேனரையும் கிழித்தெறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவா எமோஷனலாக பேசியது அவரது ரசிகர்களை கலங்க செய்திருக்கிறது.
ஜனவரி 14ஆம் தேதியிலிருந்து பத்தாம் தேதிக்கு பராசக்தி வந்ததும் போதும்; ஆளாளுக்கு இஷ்டத்துக்கு ஒரு கதையை கட்டிவிடுகிறார்கள். அதில் முக்கியமான ஒரு கதை என்னவென்றால், 'விஜய்யுடன் வேண்டுமென்றேதான் சிவகார்த்திகேயன் மோதுகிறார். அவர் எப்போதும் தன்னனை வளர்த்துவிட்டவர்களை ஒருகட்டத்துக்கு மேல் எதிர்க்க ஆரம்பித்துவிடுவார்' என்பதுதான். அந்த கதாசிரியர்களின் கதையை நம்பி சிவாவையும், அவரது ரசிகர்களையும் எல்லை மீறி விமர்சிக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
சிவகார்த்திகேயன் விளக்கம்: இந்தக் கதைகள் எல்லாம் சிவாவின் காதுகளுக்கும் சென்றிருக்கும்தான். எனவே அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சில நாட்களுக்கு முன்பு நடந்த பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், "முதலில் நாங்கள் பராசக்தி ரிலீஸை தீபாவளிக்குத்தான் பிளான் செய்திருந்தோம். பிறகு விஜய் அண்ணாவின் படம் அக்டோபர் என்று சொன்னதால் பொங்கலுக்கு போகலாம் என்று தயாரிப்பாளரிடம் சொல்லி அதற்கு பிளான் செய்தோம். ஆனால் ஜனநாயகனும் பொங்கலுக்கு என்று சொன்னதும் ஜெர்க் ஆகிவிட்டேன்.

அண்ணன், தம்பி பொங்கல்: உடனே நான் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷுக்கு ஃபோன் செய்து ஜனநாயகனும், பராசக்தியும் பொங்கலுக்கு வருகிறதே என்று கேட்டேன். இரண்டு படங்கள்தானே வரலாம். பிரச்னையில்லை என்று சொன்னார். உங்களுக்கு பிரச்னை இல்லை. எனக்குத்தான். நீங்கள் விஜய் அண்ணாவிடம் பேசுங்கள் என கூறினேன். அவரும் பேசிவிட்டு, 'பிரச்னையில்லை தாராளமாக வரட்டும். எஸ்கேவுக்கு எனது வாழ்த்துகளை சொல்ல சொன்னார் என்றார். ஆனால் இடையில் பலர் எதையோ பேசுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் வன்மம், வியாபாரம் மக்களே 33 வருடங்கள் நம்மை என்ட்டெர்டெயின் செய்தவர் விஜய் அண்ணா. ஒன்பதாம் தேதி ஜனநாயகனை கொண்டாடுங்க. யார் என்ன சொன்னாலும் இது அண்ணன், தம்பி பொங்கல்தான்' என்றார்.
அடங்காத விஜய் ரசிகர்கள்: சிவகார்த்திகேயன் இவ்வளவு பக்குவமாகவும், தெளிவாகவும் விளக்கம் கொடுத்தாலும் விஜய் ரசிகர்கள் அடங்கியபாடில்லை. மதுரையில் ஒரு திரையரங்கில்கூட இருந்த பராசக்தி பேனரை கிழித்தார்கள். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயனின் குடும்பத்தையும் கடந்த சில நாட்களாகவே வரம்பு மீறி அட்டாக் செய்துவருகிறார்கள் ஒருதரப்பினர். இந்நிலையில் தனது குடும்பத்தை அப்யூஸ் செய்தவர்கள் பற்றி பராசக்தி ஆடியோ லான்ச்சில் பேசினார் சிவா.
எமோஷனல் ஆன சிவா: அவர் பேசுகையில், "சோஷியல் மீடியா முழுக்க பயங்கரமான அட்டாக். பணம் கொடுத்து சைபர் அட்டாக். ஒரு அஜெண்டா ஃபிக்ஸ் செய்து எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த முறை அது கூடுதலாக சென்று குடும்பத்தை திட்டும் அளவுக்கு வந்து நின்றுவிட்டது. என் அம்மா என்னிடம் உனக்கு யார் இருக்கா தம்பி. நீ என்ன பண்ண போற என கேட்டார். ஆனால் இன்னைக்கு உங்களிடம் சொல்ல வேண்டுமென்று தோணுது அம்மா. உன் பையனுக்கு இவ்வளவு பேர் இருக்காங்க (ரசிகர்களை நோக்கி கையை காண்பிக்கிறார்). என்னை ஆயிரம் பேர் தள்ளிவிட நினைத்தாலும் தாங்கி பிடிக்க லட்சம் பேர் இருக்காங்க அம்மா" என்றார் எமோஷனலாக.


Click it and Unblock the Notifications











