கோட் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ கன்ஃபார்ம்.. லீக்கான டைட்டில் கார்டு.. படம் மிரட்டப் போகுது!
சென்னை: ரஜினிகாந்த் நடித்து வரும் படங்களில் மற்ற மொழியை சேர்ந்த முன்னணி நடிகர்கள் அதிகம் இடம்பெற்று வரும் நிலையில், விஜய் நடித்துள்ள கோட் படத்தில் ஒட்டுமொத்த கோலிவுட்டின் அணிவகுப்பே இருக்கும் என தெரிகிறது. மறைந்த விஜயகாந்த் முதல் அடுத்த தளபதி இவர் தான் என ரசிகர்கள் சொல்லும் இடத்துக்கு தன்னை வளர்த்துக் கொண்ட சிவகார்த்திகேயன் வரை கேமியோவாக வர காத்திருக்கின்றனர்.
ஏற்கனவே படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்களின் லிஸ்ட்டே பெரிதாக போய்க் கொண்டிருக்கும் நிலையில், கேமியோக்களையும் வெங்கட் பிரபு சரியாக கையாண்டு இருப்பாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கே கோட் படம் திருவிழாவாக இருக்க வேண்டும் என்பதற்காக வெங்கட் பிரபு இப்படியொரு விஷயத்தை குக் செய்திருக்கிறாரா என்கிற கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர்.
கோட் படத்தில் சிவகார்த்திகேயன்: வெங்கட் பிரபு இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ள சிவகார்த்திகேயனை கோட் படத்திலேயே கேமியோ ரோலில் நடிக்க வைத்து விட்டார் வெங்கட் பிரபு என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளியானாலும், அதில், எந்தளவுக்கு உண்மை உள்ளது என்கிற சந்தேகம் எழுந்து வந்த நிலையில், சிவகார்த்திகேயனுக்கான தேங்க்ஸ் கார்டு கோட் படத்தில் இருந்து லீக் ஆகியிருப்பதாக சோஷியல் மீடியாவில் அந்த டைட்டில் கார்டின் ஸ்க்ரீன் ஷாட் தீயாக பரவி வருகிறது.
விஜய்யுடன் நட்பு: விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் இருக்கும் போதே சிவகார்த்திகேயன் ஹீரோ ஆகிட்ட பிறகு ஏன் இன்னமும் விஜய் டிவியில் இருக்க, இந்த பக்கம் வா என சொன்னதே தளபதி விஜய் தான். பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கிலும் விஜய்யை சந்தித்து சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் டிரெண்டானது. இந்நிலையில், கோட் படத்தில் ஸ்பெஷல் கேமியோ ஒன்றையும் சிவகார்த்திகேயன் செய்திருக்கிறார் என உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜயகாந்த் கேமியோ: மறைந்த விஜயகாந்தை ஏஐ டெக்னாலஜி மூலமாக வெங்கட் பிரபு கோட் படத்தில் நடிக்க வைத்துள்ளார். கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம்பெற்ற விஜயகாந்தின் லுக் தான் அதற்கு ரெஃபரன்ஸ் ஆக கொடுக்கப்பட்டு இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

அஜித், தல தோனி வருவாங்களா?: விஜயகாந்த், சிவகார்த்திகேயனை தாண்டி த்ரிஷாவின் கேமியோ உள்ளதாக ஒரு தகவலும் ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிளைமேக்ஸ் நடைபெற உள்ள நிலையில், தல தோனியின் கேமியோ இருக்குமா? என்கிற கேள்வி ஒருபுறமும் அஜித்தின் ரெஃபரன்ஸ் படத்தில் இருக்கு என வெங்கட் பிரபு சொன்னதில் இருந்தே அஜித் வருவாரா? அவரது வாய்ஸ் இடம்பெறுமா? என ரசிகர்கள் எதிர்பார்க்க தொடங்கி விட்டனர்.
அனைவருக்குமான படம்: வெங்கட் பிரபு எப்போதுமே ஜாலியான படங்களை எடுக்கக் கூடியவர். இளைஞர்கள் முதல் அனைவரும் பார்க்கக் கூடிய படமாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை இயக்கியிருப்பார் என்றே எதிர்பார்க்கின்றனர். டிக்கெட் டிமாண்ட் அதிகம் உள்ள நிலையில், ரசிகர்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ படத்தை பார்த்து விட வேண்டும் என ஆவலுடன் இருக்கின்றனர். விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, யோகி பாபு, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ் என ஒரு பெரிய லிஸ்ட்டே உள்ள நிலையில், கேமியோக்களின் லிஸ்ட்டும் பெரிதாக உள்ளது.


Click it and Unblock the Notifications











