மாவீரன் ஸ்பாட்டில் கேக் கட் பண்ண சிவகார்த்திகேயன்... அதிதி எப்படி விஷ் பண்ணியிருக்கார்ன்னு பாருங்க!

சென்னை: கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இன்று தனது 38வது பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

சிவகார்த்திகேயேன் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள மாவீரன் பட முதல் பாடலும் செம்ம மாஸாக வெளியானது.

இந்நிலையில், மாவீரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயனுக்கு அதிதி ஷங்கர் வாழ்த்து சொன்ன வீடியோ வைரலாகி வருகிறது.

 சிவகார்த்திகேயன் பிறந்தநாள்

சிவகார்த்திகேயன் பிறந்தநாள்

சின்ன திரையில் இருந்து மெரினா திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். எதிர் நீச்சல், மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், டாக்டர், டான், பிரின்ஸ் என பத்து ஆண்டுகளில் அடுத்தடுத்து ஹிட் படங்களாக கொடுத்து கோலிவுட்டின் டாப் ஹீரோவாக வலம் வருகிறார். இந்நிலையில், இன்று 38வது பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயனுக்கு பல தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.

 சீனாக வந்த பிறந்தநாள் கிஃப்ட்

சீனாக வந்த பிறந்தநாள் கிஃப்ட்

மேலும், சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக மாவீரன் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டது. பரத் ஷங்கர் இசையில் அனிருத் பாடியுள்ள இந்தப் பாடல், மரண மாஸ்ஸாக உருவாகியுள்ளது. "சீன் ஆஹ்... சீன் ஆஹ்" எனத் தொடங்கும் இந்தப் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக மாவீரன் படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் இடையே பிரச்சினை என்றெல்லாம் வெளியான வதந்திகளுக்கும் இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 மாவீரன் செட்டில் செலிப்ரேஷன்

மாவீரன் செட்டில் செலிப்ரேஷன்

சிவகார்த்திகேயனுடன் அதிதி சங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது பிறந்தநாளை மாவீரன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடினார். அப்போது இயக்குநர் மடோன் அஸ்வின், மிஷ்கின் ஆகியோருடன் நாயகி அதிதி ஷங்கரும் கலந்துகொண்டார். அதிதி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சிவகார்த்திகேயன் கேக் ஊட்டி விட, அவர்களும் சிவாவுக்கு கேக் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறினர்.

 வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

மாவீரன் செட்டில் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் அப்டேட்டும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ்காக ஒரு படம், வெங்கட் பிரபு, ஏஆர் முருகதாஸ் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X