என் சந்தோஷ கண்ணீரே.. திருமண நாளில் மனைவியுடன் அப்படியொரு ரொமான்ஸ்.. சிவகார்த்திகேயன் செம க்யூட்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது 13வது திருமண நாளை மனைவி ஆர்த்தியுடன் கொண்டாடிய க்யூட் போட்டோ ஒன்றை சற்றுமுன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.

மிமிக்ரி செய்து கொண்டு ஸ்டாண்ட் அப் காமெடியனாக விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நுழைந்த சிவகார்த்திகேயன் 10 ஆண்டுகளில் டாப் ஹீரோ ரேஞ்சுக்கு கோலிவுட்டில் உயர்ந்து மாவீரனாக மாஸ் காட்டி நிற்கும் சிவகார்த்திகேயன் அடுத்து ராணுவ வீரனாக மாற உள்ளார்.

Sivakarthikeyan celebrates 13th year wedding anniversary and shares a romantic pic

சினிமாவில் பல முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தாலும், எப்போதுமே சிவகார்த்திகேயனின் ஃபேவரைட் அவரது மனைவி தான்.

13வது ஆண்டு திருமண நாள்: நடிகர் சிவகார்த்திகேயன் 2010ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். ஆர்த்தியின் வருகைக்கு பிறகு தான் சிவகார்த்திகேயன் வாழ்க்கையே வேறு ஒரு தளத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan celebrates 13th year wedding anniversary and shares a romantic pic

மெரினா, 3, மனங்கொத்தி பறவை என சாதாரண நடிகராக வலம் வந்த சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்கள் சட்டென ஸ்டார் நடிகராகவே மாற்றியது. பலருக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால், அதனை தொடர்ந்து தக்க வைத்து முன்னணி நடிகராக வருபவர்கள் தான் ரசிகர்களின் தலைவனாக முடியும். 13வது ஆண்டு திருமண நாளை கொண்டாடி வரும் சிவகார்த்திகேயனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் அதிக அளவில் உள்ளனர்.

Sivakarthikeyan celebrates 13th year wedding anniversary and shares a romantic pic

என் சந்தோஷ கண்ணீரே: மாவீரன் படம் 90 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவியுடன் ராணுவ வீரன் கதாபாத்திரத்தில் காஷ்மீருக்கும் சென்னைக்கும் மாறி மாறி பறந்து கொண்டே நடித்து வரும் சிவகார்த்திகேயன் திருமண நாளை மனைவியுடன் கொண்டாடிய லேட்டஸ்ட் போட்டோவை சற்று முன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு அவர் கொடுத்த "என் சந்தோஷ கண்ணீரே" கேப்ஷன் தான் ஹைலைட். உயிரே படம் எஃபெக்ட்டில் சிவகார்த்திகேயன் இப்படியொரு கேப்ஷன் போட்டிருப்பதற்கு பின்னால், அவர் நடித்து வரும் காஷ்மீர் சம்பந்தப்பட்ட படத்தின் கதை இருக்குமா? என்றெல்லாம் ரசிகர்கள் ஒரு பக்கம் டீகோட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X