பிளாக்பஸ்டர் டான்.. பிரம்மாண்ட கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.. சிவகார்த்திகேயன் செம ஹேப்பி!

சென்னை: நடிகராகவும் தயாரிப்பாளராகவும் டான் படத்தின் வெற்றியால் சிவகார்த்திகேயன் செம மகிழ்ச்சியில் உள்ளார்.

டாக்டர் படத்தைத் தொடர்ந்து டான் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில், பிரம்மாண்ட டான் பெயர் போட்ட கேக்கை வெட்டி படக்குழுவினருடன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, சிவாங்கி மற்றும் தொழில்நுட்ப கலைஞருடன் இந்த வெற்றி விழா கொண்டாடப்பட்டது.

60 கோடி வசூல்

60 கோடி வசூல்

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை மே 13ம் தேதி வெளியான நிலையில், 5 நாட்களில் உலகளவில் 60 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 50 கோடி ரூபாய் வசூலை டான் படம் நெருங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் இரு வாரங்கள் இப்படியே ஓடினால் 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டான் சக்சஸ் பார்ட்டி

டான் சக்சஸ் பார்ட்டி

இந்நிலையில், டான் படத்தின் வெற்றியை படக்குழுவினருடன் நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தற்போது கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். லைகா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து டான் படத்தை தயாரித்தன. டான் பெயர் போட்ட கேக் உடன் சக்சஸ் பார்ட்டி களைகட்டியது.

எஸ்ஜே சூர்யா, சிவாங்கி

எஸ்ஜே சூர்யா, சிவாங்கி

நடிகர் சிவகார்த்திகேயன் உடன் கேக் கட்டிங்கின் போது டான் படத்தில் நடித்த எஸ்.ஜே. சூர்யா மற்றும் நடிகை சிவாங்கி உடனிருந்தனர். இயக்குநர் சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது தொழில்நுட்ப கலைஞர்கள், எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் கலையரசு உள்ளிட்ட பலர் இந்த வெற்றி விழாவில் கலந்து கொண்டனர்.

சிவகார்த்திகேயன் ஹேப்பி

சிவகார்த்திகேயன் ஹேப்பி

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் திரைப்படம் பள்ளி, கல்லூரி மாணவர்களையும், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் சந்தோஷப்படுத்தி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும் டான் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவான விமர்சனங்கள் தான் இந்த படம் பட்ஜெட்டை விட இரு மடங்கு அளவு வசூலிக்கும் அளவுக்கு வந்துள்ளதால் நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் செம ஹேப்பியில் உள்ளார்.

Recommended Video

Nagooran Ramachandran | நான் Edit பண்ணிய படங்களை அப்பா பார்க்கவில்லை | Filmibeat Tamil
அடுத்தும் ‘டா' எழுத்தா

அடுத்தும் ‘டா' எழுத்தா

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் என இரு ‘டா' எழுத்து படங்களும் ஹிட் அடித்துள்ள நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு பைலிங்குவலாக உருவாகி வரும் சிவகார்த்திகேயனின் 20வது படத்துக்கும் ‘டா' எழுத்தில் டைட்டில் வைக்கப்படுமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X