சிவகார்த்திகேயன் மகனுக்கு 2 வயசாகிடுச்சு.. குடும்பத்தோட எவ்ளோ க்யூட்டா இருக்காரு பாருங்க!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் புதிய படத்திற்காக தனது ஹேர்ஸ்டைலை இதுவரை மறைத்து வைத்திருந்த நிலையில், தனது லேட்டஸ்ட் லுக் போட்டோக்களை தனது மகன் குகன் தாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது வீட்டில் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட க்யூட் போட்டோக்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.

இவ்ளோ க்யூட்டான குடும்பமா என பலரும் கண் வைத்து வருவதால் திருஷ்டி சுத்திப் போட்டுக்கோங்க எஸ்கே என ரசிகர்கள் கமெண்ட்டுகளையும் போட்டு வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் மகன் பிறந்தநாள்: நடிகர் சிவகார்த்திகேயனின் மகன் குகன் தாஸ் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி பிறந்தார். தன்னுடைய அப்பாவே தனக்கு மகனாக பிறந்துள்ளார் என்றே ஆசையாக மகனை வளர்த்து வரும் சிவகார்த்திகேயன் தனது மகனின் 2வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார்.

சிவகார்த்திகேயன் மகன் குகனின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட க்யூட்டான போட்டோக்களை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.
வீடு எப்படி இருக்கு பாருங்க: சிவகார்த்திகேயன் மகன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான போட்டோக்களை பார்த்த ரசிகர்கள், இதுதான் சிவகார்த்திகேயன் வீடா? என்ன இப்படி இருக்குன்னு வாய் பிளந்து போயுள்ளனர்.

சிவகார்த்திகேயன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்த ரசிகர்கள் செம அழகான குடும்பம் என வாழ்த்தி வருகின்றனர்.
ஹேர்ஸ்டைல் மாத்திட்டாரா: இந்த போட்டோக்கள் லேட்டஸ்ட்டாக எடுக்கப்பட்டதா? இல்லை முன்னதாக எடுக்கப்பட்டதா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர். மாவீரன் படத்தை முடித்து விட்டு கமல் தயாரிப்பில் நடித்து வரும் படத்திற்காக வித்தியாசமான ஹேர்ஸ்டைல் லுக்கில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் நிலையில், தனது தலையில் பெரிய தொப்பியை போட்டு மறைத்தபடியே சமீபத்தில் நடந்த மாவீரன் இசை வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், இது புது லுக்கா? அல்லது முன்னதாக எடுத்த போட்டோவா என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
மாவீரனுக்கு வெயிட்டிங்: இந்த வாரம் வெளியாக உள்ள சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் அவருக்கு கேட்கும் குரலாக விஜய்சேதுபதியின் குரல் இடம்பிடித்துள்ளது. இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஜூலை 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பலரும் இந்த படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











