Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் கேரியரை காலி செய்ய நினைத்த பிரபலம்..? ஆனால் நடந்தது வேறு!
சென்னை: குறுகிய காலத்தில் தமிழில் முன்னணி நடிகராக உயர்ந்தவர் சிவகார்த்திகேயன்.
விஜய் டிவியில் இருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்தவர்களில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி ரொம்பவே பெரியது.
தற்போது கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில், அவரது கேரியரை திரையுலக பிரபலம் காலி செய்ய நினைத்தது குறித்தும் அதன் உண்மையான பின்னணி பற்றியும் தற்போது தெரியவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் கேரியரை காலி செய்ய நினைத்த பிரபலம்: கோலிவுட்டின் டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக மாஸ் காட்டி வருகிறார் சிவகார்த்திகேயன். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் விஜய் டிவியில் கிடைத்த வாய்ப்பை வைத்து இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளார். கலக்கப் போவது, ஜோடி நம்பர் 1, ரியாலிட்டி ஷோ ஆங்கர் என சின்ன திரையில் வெரைட்டி காட்டியது போன்றே, சினிமாவிலும் கலந்துகட்டி அடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது மாவீரன் திரைப்படம் வெளியாகவுள்ளது. மாவீரனை தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் வரும் தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அயலான் படமும் வெளியாகவுள்ளது. ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் படங்களுக்கு பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத நிலையில், இப்போதெல்லாம் அவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மிகப் பெரிய ஓபனிங் பெறுகின்றன.
ஒருகட்டத்தில் நடிகராக மட்டும் இல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். அப்போது அவர் தயாரிப்பில் வெளியான சில படங்கள் தோல்வியடைந்ததால் நஷ்டம் அடைந்தது. இதனால் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வந்தார் சிவகார்த்திகேயன். இதனிடையே அவரது கேரியரை காலி செய்ய வேண்டும் என பிரபலம் ஒருவர் பிளான் செய்ததாக செய்திகள் வெளியாகின.
அதாவது உதயநிதி தான் சிவகார்த்திகேயன் வளர்ச்சியை பிடிக்காமல் அவருக்கு எதிராக ஸ்கெட்ச் போட்டதாக சில வதந்திகள் பரவின. ஆனால், உண்மையில் சிவகார்த்திகேயனும் உதயநிதியும் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்களாம். சிவகார்த்திகேயன் படங்களை தனது ரெட் ஜெயன்ட் மூலம் வெளியிட்டு அவருக்கு சப்போர்ட் தான் செய்துள்ளார் உதயநிதி.
இப்படியொரு வதந்தி பரவ காரணமே உதயநிதி கொடுத்த ஒரு பேட்டி தான் என சொல்லப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் பேசியிருந்த உதயநிதி, சிவகார்த்திகேயன் டான் திரைப்படம் குறித்து ஜாலியாக பேசியிருந்தார். அதில், அந்தப் படத்தை தனது நண்பர்களுடன் பார்த்ததாகவும், அப்போது எங்களுக்கு சிரிப்பே வரவில்லை எனவும் கூறியிருந்தார். ஆனால் டான் படம் எதிர்பாராதவிதமாக ஹிட்டாகிவிட்டது என ஜாலியாக கலாய்த்திருந்தார்.
அதேநேரம் டான் படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயன்ட் மூலம் ரிலீஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. பேட்டியில் நேரிடையாக சிவகார்த்திகேயனை உதயநிதி கலாய்த்ததால், இதனை பலரும் தவறாக புரிந்துகொண்டார்களாம். சிவகார்த்திகேயன் வளர்ச்சி பிடிக்காமல் தான் உதயநிதி அவ்வாறு சொன்னதாக கிளப்பிவிட்டனர். ஆனால், அப்படி எதுவும் இல்லை என பிரபல சினிமா விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











