சூரிக்கு கண்டிப்பா தேசிய விருது கிடைக்கும்.. சியான் விக்ரமுடன் கம்பேர் பண்ணி பேசிய சிவகார்த்திகேயன்!
சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அந்த படத்துக்காக சியான் விக்ரமுக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில், சூரிக்கு தேசிய விருது கிடைக்கும் என சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
விஜய் டிவியில் சாதாரண ஸ்டாண்டப் காமெடியனாக வந்து அங்கேயே தொகுப்பாளராக மாறி அப்படியே படிப்படியாக முன்னேறிய சிவகார்த்திகேயன் தனுஷின் 3 படத்தில் காமெடியனாக நடித்திருந்தார். அதன் பின்னர், தனுஷ் தயாரிப்பில் வெளியான எதிர்நீச்சல் மற்றும் காக்கிச் சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து கமர்ஷியல் ஹீரோவாக மாறினார்.

படிப்படியாக முயற்சியால் முன்னேறிய சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி கனா, வாழ், குரங்கு பெடல் மற்றும் கொட்டுக்காளி என அடுத்தடுத்து தரமான படங்களை கொடுத்து வருகிறார்.
சியான் விக்ரமுடன் ஒப்பிட்டு: சியான் விக்ரம் சாருடன் ஒப்பிட்டு பேசுகிறேன் என யாரும் தவறாக நினைக்க வேண்டாம், விக்ரம் சார் 2003-ம் ஆண்டு ஒரே வருஷத்துல தூள், சாமி மற்றும் பிதாமகன் என மூன்று பிளாக்பஸ்டர் படங்களை அடுத்தடுத்து கொடுத்தார். ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. அதைப்போல இந்த ஆண்டு அண்ணன் சூரிக்கு அமைந்துள்ளது. கருடன், கொட்டுக்காளி அடுத்து விடுதலை 2 என வரிசையாக காத்திருக்கின்றன என்றார்.
தேசிய விருது கிடைக்கும்: சூரி அண்ணனுக்கு நிச்சயம் கொட்டுக்காளி திரைப்படத்தில் தேசிய விருது கிடைக்கும் என நம்புகிறேன். அந்த அளவுக்கு இந்தப் படத்தில் சூரி அண்ணன் தனது உழைப்பை கொட்டி இருக்கிறார். ஒருவேளை இந்த படத்தில் மிஸ் ஆனால், அடுத்து வெற்றிமாறன் சார் படத்தில் கண்டிப்பாக அவருக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என பேசியுள்ளார்.
சோசியல் மீடியாவில் சர்ச்சை: யாரையும் கண்டுபிடிக்கவும் வளர்த்து விடவோ முடியாது என்கிற ரீதியில் சிவகார்த்திகேயன் பேசியது சோஷியல் மீடியாவில் பெரும் காட்டுத்தீப் போல பற்றிக் கொண்டு எரிகிறது. சிவகார்த்திகேயனுக்கு எதிராக தனுஷின் பழைய வீடியோக்களை நெட்டிசன்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
கவினுடன் கம்பேரிசன்: இயக்குநர் நெல்சன் தான் தன்னை வளர்த்து விட்டார் என ஒவ்வொரு மேடையிலும் கவின் பெருமையுடன் சொல்லும் வீடியோக்களை ஷேர் செய்து கவின் ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு எதிராக கட்டம் கட்டி வருகின்றனர். இந்நிலையில், தங்கலான் படத்துக்கு சியான் விக்ரமுக்கு தேசிய விருது கிடைக்கும் என நினைத்துக் கொண்டிருக்கும் சியான் விக்ரம் ரசிகர்களையும் சிவகார்த்திகேயன் சீண்டி உள்ளாரா என்கிற கேள்விகள் வெடித்துள்ளன.


Click it and Unblock the Notifications











