சீமராஜாவாக நடித்ததில் பெருமை கொள்வேன் அய்யா.. சிங்கம்பட்டி ஜமீன் மறைவுக்கு சிவகார்த்திகேயன் இரங்கல்
சென்னை: சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி மறைவுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன், முருகதாஸ் தீர்த்தபதி உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 89.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிங்கம்பட்டியின் 31-வது ஜமீனாக இருந்தவர் அவர். இவர் தான் தமிழகத்தின் முடிசூட்டப்பட்ட கடைசி ஜமீன்.

ஜமீன் மரியாதை
1936ம் ஆண்டில் தந்தை சங்கர தீர்த்தபதி ராஜா மறைவுக்கு பிறகு தனது மூன்றரை வயதில் முருகதாஸ் தீர்த்தபதிக்கு முடிசூட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்த பிறகும், சிங்கம்பட்டி ஜமீனுக்கான மரியாதை எப்போதும் காக்கப்பட்டு வந்துள்ளது. அப்பகுதி மக்களும் ஜமீனிற்கு உரிய மரியாதையை அளித்தே வந்துள்ளனர்.

சிவகார்த்திகேயன்
சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதி முருகதாஸ் தனது 89 வது வயதில், உயிரிழந்துள்ளார். இதனால் சிங்கம்பட்டியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் சோகத்தில் மூழ்கியுள்ளது. அவர் மறைவுக்கு ஏராளமானவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'சீமராஜா' படத்தில் சிங்கம்பட்டி ராஜாவாக நடித்திருந்த சிவகார்த்திகேயன், அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆழ்ந்த அனுதாபங்கள்
அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், 'சிங்கம்பட்டி சீமராஜாவாக நடித்ததற்கு எப்போதும் பெருமை கொள்வேன் அய்யா. அய்யாவின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும்,சிங்கம்பட்டி மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் #RIPsingampattiRaja' என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இலக்கியவாதி
இவரைப் போலவே சீமராஜா படத்தின் இயக்குனர் பொன்ராமும் இரங்கல் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், #RIPsingampattiRaja ஐமீன், ராஜா மட்டும் அல்ல, தமிழ் இலக்கியவாதி, பண்பானவர். இவர் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் சிங்கம்பட்டி ஊர் மக்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











