பிரபல யூடியூபர் மதன் கெளரிக்கு திருமணம்.. மணமக்களுக்கு சூப்பரா வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

சென்னை: ஹலோ எவ்ரி ஒன்.. என ஆரம்பித்து ஏகப்பட்ட உலக நிகழ்வுகளை அடுக்கி யூடியூபில் 58 லட்சம் ரசிகர்களை சப்ஸ்கிரைபர்களாக கொண்டுள்ள மதன் கெளரிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

வெறும் மொபைல் வீடியோ மூலம் கூட நல்ல கன்டென்ட் இருந்தால் பிரபல யூடியூபராகலாம் என சொல்லாமல் செய்து காட்டியவர் மதன் கெளரி.

தனது காதலியை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து இருந்த மதன் கெளரி நேற்று அவரை மணமுடித்தார்.

எம்ஜி என செல்லமாக

எம்ஜி என செல்லமாக

MG என்றாலே மதன் கெளரி தான் என ரசிகர்கள் கண்டுபிடிக்கும் அளவுக்கு பிரபலமானவர் யூடியூபர் மதன் கெளரி. 5.8 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் யூடியூப் உலகில் பெரும் செல்வாக்குடன் வலம் வருகிறார். உலக நிகழ்வுகள் முதல் உள்ளூர் பிரச்சனைகள் வரை ஏகப்பட்ட விஷயங்களில் என்ன நடந்தது? என்ன நடந்திருக்கும்? என வீடியோக்களை போட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமாகி உள்ளார்.

பூமி படத்தில்

பூமி படத்தில்

ஜெயம் ரவியின் பூமி படத்தில் இவருடைய வீடியோவை நாயகி நிதி அகர்வால் பார்க்கும்படியான காட்சிகள் இடம்பெற்று இருக்கும். டைட்டில் கார்டிலும் மதன் கெளரிக்கு தேங்ஸ் கார்டு போட்டிருப்பார்கள். மதன் கெளரியின் தகவல்கள் மற்றும் வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளை வைத்தே அந்த படம் உருவாக்கப்பட்டதாகவும் ட்ரோல்கள் அந்த சமயத்தில் கிளம்பின.

காதலும் பிரேக்கப்பும்

காதலும் பிரேக்கப்பும்

ஸ்கூல் படிக்கும் போது ஃபேஸ்புக்கில் பேசி பழகி இருவரும் காதலித்ததாகவும் ஒரு கட்டத்தில் தன்னால் தங்களுக்குள் பிரேக்கப் ஏற்பட்டதாகவும், அந்த மன அழுத்தத்தை போக்கவே யூடியூப் சேனல் தொடங்கியதாகவும் அப்படியே ஃபேஸ்புக் ஓனர் மார்க் சக்கர்பெர்க் கதை போல தனது காதல் கதையை தனது யூடியூப் பக்கத்தில் சொல்லி இருந்தார் மதன் கெளரி.

நாங்க வேறு ஜாதி

நாங்க வேறு ஜாதி

அதுமட்டுமின்றி, இருவரும் வேறு வேறு ஜாதி என்றும் ஆனால், தங்களின் பெற்றோர்கள் ஜாதியை ஒரு பொருட்டாக பார்க்காமல் தங்களது காதலுக்காக திருமணத்திற்கு ஓகே சொல்லி விட்டனர் என்றும் அந்த வீடியோவில் கூறியிருந்தார். பிரேக்கப்புக்கு பிறகு மீண்டும் காதலியிடம் மன்னிப்பு கேட்டதால் தான் மீண்டும் நாங்கள் ஒன்று சேர்ந்தோம் என்றும் கூறியிருந்தார்.

மதன் கெளரி திருமணம்

மதன் கெளரி திருமணம்

கொரோனா காலக்கட்டம் என்பதால் திருமணத்தை தள்ளி வைக்கலாமா? வேண்டாமா? என குழம்பி வந்த நிலையில், பெற்றோர்கள் முடிவு செய்த இந்த தேதியில் தங்களின் திருமணம் நடைபெற்றுள்ளதாக தற்போது அது தொடர்பாகவும் ஒரு வீடியோவை மதன் கெளரி வெளியிட்டுள்ளார்.முகூர்த்த நாளான பிப்ரவரி 11ம் தேதி மதன் கெளரிக்கும் அவரது காதலி நித்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

சிவகார்த்திகேயன் வாழ்த்து

சிவகார்த்திகேயன் வாழ்த்து

தனது ட்விட்டர் பக்கத்தில் திருமணமான புகைப்படத்தை மதன் கெளரி இன்று ஷேர் செய்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் " மணமக்கள் இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ மனமார்ந்த வாழ்த்துகள்" என சூப்பராக வாழ்த்து கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் மதன் கெளரியை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X