கருவேப்பில்லை ஆன தனுஷ்.. தூக்கிவிட்டவரை தூக்கி எறிந்த சிவகார்த்திகேயன்.. விளாசிய பிஸ்மி!

சென்னை: கொட்டுக்காளி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், தனக்கு வாழ்க்கை கொடுத்ததாக சொல்லி பழகிவிட்டனர் என்று பேசி இருந்தார். அவர் தனுஷ் குறித்து தான் பேசினாரா? என சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த வலைப்பேச்சு பிஸ்மி.

சிவகார்த்திகேயனின் அந்த பேச்சை பார்க்கும் போது, அவர் தனுசைத்தான் சொல்கிறார் என்று தான் தோன்றுகிறது. அதே நேரம் அவர் பாண்டியராஜையும் சொல்லி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கு, ஏன் என்றால், மெரினா படத்தில் சிவகார்த்திகேயனை அறிமுகப்படுத்தியது பாண்டிய ராஜ் தான். அதன் பிறகு சிவகார்த்திகேயன், பாண்டியராஜுக்கு தேதி ஒதுக்கவே இல்லை.

Sivakarthikeyan Dhanush bismi

கழட்டிவிட்டிவிட்டார்: மெரினா படத்தின் ஒப்பந்தம் ஆனதே போதே, இரண்டு படத்தில் நடித்து கொடுக்கிறேன் என்று ஒப்பந்தம் போட்டுவிட்டுத்தான் அந்த படத்தில் நடித்தார். ஆனால், அதன் பிறகு அவருக்கு தேதி ஒதுக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் டென்ஷனான பாண்டியராஜ், அந்த அக்ரிமெண்ட் பத்திரத்தையே கழித்துப்போட்டுவிட்டார். நம்மால் சினிமாவில் அறிமுகமான ஒருவர், நமக்கே தேதி கொடுக்கவில்லை, இப்படிபட்ட ஒரு ஆளை வைத்து நாம படம் எடுக்க வேண்டுமான என்ற வெறுப்பில் அந்த அக்ரிமெண்டை கிழித்துப்போட்டார்.

தனுஷ் பேசியதே இல்லை: ஆனால், தற்போது சிவகார்த்திகேயனின் நக்கலான பேச்சு, பாடி லேங்குவேஜை பார்க்கும் போது அவர் தனுசைத்தான் தாக்கி பேசினார் என்று தான் தோன்றுகிறது. இதில் முக்கியமான விஷயம், என்னவென்றால், எந்த காலத்திலும், எந்த மேடையிலும் சிவகார்த்திகேயனை வளர்ந்துவிட்டது நான் என்று தனுஷ் பேசியதே இல்லை. இதுதான் உண்மை ஊடகத்திற்கு தெரியும் என்பதால், ஊடங்கள் தொடர்ந்து தனுஷால் வளர்ந்த சிவகார்த்திகேயன் என்று செய்தி வெளியிட்டு வருகிறது. இந்த செய்திகளால் சிவகார்த்திகேயன் எரிச்சலாகி இப்படி பேசி இருக்கிறார். சிவகார்த்திகேயன் இப்படி பேசியது, தனுஷ் ரசிகர்களை மட்டுமில்லாமல், சாதாரண மக்களுக்கும் அவர்மீது எரிச்சலை ஏற்படுத்தி இருக்கு.

அல்வா கொடுத்தார்: சிவகார்த்திகேயன் ஒவ்வொரு கால கட்டத்திலும், அவரை கை தூக்கி விட்ட, வளர்ந்துவிட்ட ஆட்களை அவர் நக்கலடித்து, கழட்டி விட்டு, அடுத்த கட்டத்திற்கு போய் இருக்கிறார். முதலில் பாண்டியராஜ், தனுஷ், தயாரிப்பாளர் மதன், அவர் தான் பழைய கார் வைத்து இருந்த சிவகார்த்திகேயனுக்கு, 50லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை பரிசாக கொடுத்தார். அதன் பிறகு தான் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சம் பெற்றது. அதுமட்டுமில்லாமல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் என பல படத்தை சிவகார்த்திகேயனை வைத்து தயாரித்தார். அப்படிப்பட்ட அவருக்கே தேதி கொடுக்காமல் அல்வா கொடுத்து விட்டார்.

டாப் ஹீரோவாக நினைக்கிறார்: அதே போல, சாதாரண ஒரு மிமிக்ரி கலைஞராக இருந்த சிவகார்த்திகேயனை ஒரு நடிகராக மாற்றியதே, ஆர்.டி. ராஜா தான். அவர் தான் நயன்தாரா, ஹன்சிகா என டாப் நடிகர்களை இவருக்கு ஹீரோயினாக போட்டு அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றார். அப்படி பட்டவரையே சிவகார்த்திகேயன் ஒரு கட்டத்தில் கழட்டிவிட்டுவிட்டார். சிவகார்த்திகேயன் தன்னை ஒரு ரஜினி,விஜய்க்கு ஈடான நடிகராக நினைத்துக்கொண்டு செயல்படுகிறார். இது அவரின் வளர்ச்சிக்கு நல்லது அல்ல என்று பிஸ்மி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X