சில ஹீரோக்கள் நிஜ வாழ்வில் அக்மார்க் வில்லன்கள்.. சிவகார்த்திகேயன் செஞ்ச துரோகம்.. அந்தணன் ட்வீட்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் உடன் பல ஆண்டுகளாக நட்பாக பழகி வந்த இசையமைப்பாளர் டி. இமான் திடீரென சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டார் என பெரிய குண்டை தூக்கிப் போட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய், அஜித், சூர்யா, தனுஷுக்கு அடுத்து ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டு 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

கமல்ஹாசன் தயாரிப்பில் ராணுவ வீரரின் பயோபிக் போன்ற படத்தில் நடித்து வருகிறார். சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில், டி. இமானின் சமீபத்திய பேட்டிக்கு வலைப்பேச்சு அந்தணன் போட்டுள்ள ட்வீட் மேலும், அதிர்ச்சியை கிளப்பி உள்ளது.

செம காம்போ: நகரத்து படங்களுக்கு அனிருத் மற்றும் கிராமத்துப் படங்களுக்கு டி. இமான் என நடிகர் சிவகார்த்திகேயன் தனது 10 ஆண்டு கால வளர்ச்சிக்கு இந்த இருவரையும் அதிகம் பயன்படுத்திக் கொண்டார். மனங்கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை என தொடர்ந்து சிவகார்த்திகேயன், டி. இமான் காம்போ சமீப காலமாக காணாமல் போனது ஏன் என்கிற கேள்விக்கு தற்போது டி. இமானே பரபரப்பு பதிலை தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

பெரிய துரோகம்: சிவகார்த்திகேயன் தனக்கு செய்த துரோகத்துக்கு இந்த ஜென்மத்தில் அவர் படங்களுக்கு இனிமேல் இசையமைக்க மாட்டேன் என்றும் என் இசையில் தான் அவர் பாடகரே ஆனார் என்றும் ஆனால், என்னை நம்ப வைத்து கழுத்தை அறுத்து விட்டார். அவர் செய்த துரோகம் என்ன? என்கிற கேள்விக்கு அதை கூற விரும்பவில்லை என இமான் பேசியிருப்பது திரைத்துறையையே அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
அந்தணன் போட்ட போடு: "டி.இமான் என்ன சொல்ல வர்றாருன்னு புரியுதா? வலைப்பேச்சு-இந்த விஷயத்தை பலமுறை நாசுக்கா சொல்லியிருக்கு. இன்று அதையே தன் வாயால் உறுதி படுத்துகிறார் இமான். சில ஹீரோக்கள் நிஜ வாழ்வில் அக்மார்க் வில்லன்கள். அவ்வளவே!" என பதிவிட்டு சிவகார்த்திகேயன் ரியல் லைஃப்பில் மிகப்பெரிய வில்லன் என பதிவிட்டுள்ளார்.

இமான் விவாகரத்துக்கு காரணம்: இமானின் விவாகரத்துக்கே சிவகார்த்திகேயன் தான் காரணம் என உடைத்து பேசுங்க அந்தணன் சார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அந்தளவுக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக சிவகார்த்திகேயன் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார் என்பதையும் வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











