சிவாவை நம்பி பயனில்லை... கார்த்தி பக்கம் தாவிய ரெமோ இயக்குநர்!
Recommended Video

சிவாவை நம்பி பயனில்லை...கார்த்தி பக்கம் தாவிய ரெமோ இயக்குநர்!- வீடியோ
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ரெமோ. இந்த படத்தின் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன், பாண்டிராஜ், அட்லீ ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்த ரெமோ படம் சூப்பர் ஹிட் ஆனது.
ரெமோ ரிலீஸுக்கு முன்பே அதன் தயாரிப்பாளரான ஆர்டி ராஜா, பாக்கியராஜ் கண்ணனின் அடுத்த படத்தையும் எங்கள் நிறுவனமே தயாரிக்கும் என்று சொல்லியிருந்தார். எனவே சிவகார்த்திகேயனுக்காக காத்திருந்தார் பாக்கியராஜ். சிவா அடுத்தடுத்த கமிட்மெண்ட்களில் பிசியாக இருப்பதால் இப்போது கார்த்தியை அணுகி கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கிறாராம்.

ஆனால் இந்தப் படத்தை ஆர்டி ராஜாவே தயாரிக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications