சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ரிலீஸ் எப்போ தெரியுமா? அதுவும் தியேட்டரில் தானாம்!
சென்னை: இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள டாக்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், வரும் ஜூலை மாதம் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிடி ரிலீஸை தவிர்த்து திரையரங்க வெளியீட்டிற்காக வெயிட் பண்ணும் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு கன்ஃபார்ம் செய்து விட்டார்களாம்.

முதல்முறை
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. யு சான்றிதழ் நாயகனாக வலம் வந்த சிவகார்த்திகேயன் முதல் முறையாக இந்த படத்தில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளதால் படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் பல நிறைந்திருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

ஒடிடி ரிலீஸ் இல்லை
டாக்டர் திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் என்கிற தகவல்கள் சமீபத்தில் வெளியாகின. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் டாக்டர் திரைப்படம் வெளியாகும் என்றும் விஜய் டிவிக்கு அதன் சாட்டிலைட் உரிமம் விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசியில் தயாரிப்பு தரப்பு எடுத்த நடவடிக்கை காரணமாக சில பல பிரச்சனைகள் கிளம்பின.

சன் டிவியில் டாக்டர்
அடுத்தடுத்து சிவகார்த்திகேயனை வைத்து 4 புதிய படங்களை தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், கேஜேஆர் தயாரிப்பு நிறுவனம் டாக்டர் படத்தை சன் டிவிக்கு முன்னதாகவே விற்றதால் தான் தயாரிப்பு தரப்புக்கும் சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனை ஏற்பட்டது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தியேட்டர் ரிலீஸ்
ஒடிடிக்கு முன்பாக டாக்டர் படத்தை தியேட்டரில் தான் திரையிட வேண்டும் என்கிற முனைப்பில் இருந்து வந்த படக்குழுவினர் தற்போது ரிலீஸ் தேதியையும் லாக் செய்துள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. தியேட்டர்கள் விரைவில் திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர தினம்
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் உருவாகி உள்ள ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications











