ஹீரோ சிவகார்த்திகேயன் இனி‘டாக்டர்.. தொடங்கியது படப்பிடிப்பு.. என்ன மாதிரி கதை என நெல்சன் விளக்கம்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் படப்பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.

சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

ஹீரோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டாக்டர். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை 'கோலமாவு கோகிலா' படத்தை இயக்கிய நெல்சன் இயக்குகிறார்.

Sivakarthikeyan Doctor shoot started with Pooja

'கேங்க் லீடர்' படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமான பிரியங்கா நாயகியாக நடிக்கிறார். வினய், யோகி பாபு, இளவரசு, அர்ச்சனா, 'கோலமாவு கோகிலா' டோனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க, விஜய கார்த்திக் ஒளிப்பதிவாளராக பணிபுரியவுள்ளார்.

Sivakarthikeyan Doctor shoot started with Pooja

இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் கேட்ட போது, " ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி என அனைத்துமே அடங்கியது தான் கதை. இந்த ஜானர் என்று அடக்கிவிட முடியாது. 'டாக்டர்' என்று தலைப்பிட்டுள்ளோம். இதில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளனர். சென்னை மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம்.

Sivakarthikeyan Doctor shoot started with Pooja

விஜய் டிவியில் பணிபுரியும் போதிலிருந்தே சிவகார்த்திகேயனைத் தெரியும். அப்போதிலிருந்து சுமார் 12 ஆண்டுகளாக எங்களது நட்பு தொடர்கிறது. எதிர்காலத்தில் ஒரு படம் பண்ணனும் என்று பேசுவோம். 'கோலமாவு கோகிலா' படத்துக்குப் பிறகு அவருக்கு தகுந்த மாதிரியான கதையும் அமைந்தது. சொன்னேன்.. உடனே ஒ.கே சொல்லிட்டார்... தொடங்கிட்டோம்" என்று தெரிவித்தார்.

Sivakarthikeyan Doctor shoot started with Pooja

இந்தப் படத்தின் பூஜையில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனர் கே.ஜே.ராஜேஷ், சிவகார்த்திகேயன், இயக்குநர் நெல்சன், யோகி பாபு, வினய், நாயகி பிரியங்கா, இணை தயாரிப்பாளர் கலை அரசு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். அடுத்தாண்டு பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக உருவாகவிருக்கும் 'டாக்டர்' படத்தின் பயணம் இன்று முதல் தொடங்குகிறது.

Sivakarthikeyan Doctor shoot started with Pooja

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X