பூபதி பாண்டியன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சொப்பனசுந்தரி’
சென்னை: பட்டத்து யானைக்கு பிறகு பூபதி பாண்டியன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு 'சொப்பனசுந்தரி' என பெயரிட்டுள்ளார்கள்.
மெரினாவில் தொடங்கிய சிவகார்த்திகேயனது திரை உலக வாழ்க்கை எதிர்நீச்சல் போட்டு எங்கோ போய் நிற்கிறது. இவரை நாயகனாக போட்டு படம் தயாரிக்க, இயக்க என வரிசையில் நிற்கின்றனர். அந்தளவுக்கு போட்ட காசை திரும்ப எடுத்து விடலாம் என்ற நம்பிக்கை இவர் மீது.
பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, முன்னணி நடிகைகளும் இவருடன் நடிப்பதற்கு போட்டிபோடுவதாக தகவல்.

வரிசை கட்டி நிற்கும் வாய்ப்புகள்....
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் தனுஷ், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியாக தயாரிக்கும் படங்களில் சிவகார்த்திகேயன் தான் ஹீரோ.

மான் கராத்தே...
நடிகர் தனுஷ் தயாரிப்பில் 'எதிர்நீச்சல்' வெற்றியைத் தந்த அதே இயக்குநர் துரை.செந்தில்குமார் மீண்டும் சிவகார்த்திகேயனை இயக்குகிறார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும், 'மான் கராத்தே'விலோ ஹன்சிகா தான் சிவகார்த்திகேயன் ஜோடி.

சொப்பனச்சுந்தரி...
தற்போது, இயக்குநர் லிங்குசாமி தயாரிப்பில் பூபதி பாண்டியன் இயக்கும் படத்திற்கு சொப்பனச்சுந்தரி என பெயரிட்டுள்ளனர். 'பட்டத்து யானை' ரிலீஸிற்குப் பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

கரகாட்டக்காரன் புகழ்...
கரகாட்டக்காரன் புகழ் டயலாக்கான, "சொப்பன சுந்தரி வச்சிருந்த காரை இப்ப யார் வச்சிருக்கா?" நினைவாகத் தான் இப்படத்திற்கு சொப்பனச்சுந்தரி என பெயர் சூட்டியிருக்கிறார்களாம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்...
ஏற்கனவே, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' தலைப்பில் வடிவேலுவின் காமெடி டயலாக்கில் சிவகார்த்திகேயனின் படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











