சூர்யா, சிம்புவை ஆப் செய்த சிவகார்த்திகேயன்.. இனி இவர் தான் சூப்பர் ஹீரோ!

சென்னை: காதல், காமெடி டிராமாக்களில் மட்டுமே நடித்து வந்த சிவகார்த்திகேயன் தற்போது தனது ரூட்டை மாற்றி முன்னணி நடிகர்களுக்கே டஃப் கொடுத்து வருகிறார். அமரன் படம் 300 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டிய நிலையில் கனமான கதாப்பாத்திரம் கொண்ட படங்களை தேடி நடித்து வருகிறார். மற்ற நடிகர்களை போன்று கதையில் அதை மாத்துங்க, இதை செய்ய வேண்டும் என்ற குடைச்சல் தராமல் இயக்குநர்களை தேடி இவரே கதை கேட்பதாகக் கூறப்படுகிறது.

மதராஸி: மான்கராத்தே படம் வெளியானபோதே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிவகார்த்திகேயன் பிசியான நடிகராக மாறினார். ஏ.ஆர்.முருகதாஸூம் விஜய், ரஜினி ஆகியோரின் படங்களை இயக்க சென்றார். இந்நிலையில், அமரன் படத்தில் நடிக்க கமிட் ஆன போதே படம் குறித்த தலைப்பு இல்லாமல் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க தொடங்கினார். தற்போது, மதராஸி படத்தின் டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Sivakarthikeyan next movie sivakarthikeyan parasakthi

இன்னும் 20 நாட்களே படத்தின் ஷூட்டிங் இருப்பதாகக் கூறப்படுகிறது. சல்மான் கான் நடிக்கும் சிக்கந்தர் படத்தினை முருகதாஸ் எடுத்து வருவதால் மதராஸி படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

சரவெடி: இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்கள் மூலம் இந்திய சினிமாவில் தலை சிறந்த இயக்குநராக கவனம் பெற்றுள்ளார் சுதா கொங்காரா. இவர் அடுத்து இயக்கும் புறநானூறு படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால், சூர்யா இக்கதையில் சில மாற்றங்களை செய்ய சொன்னதால் சுதா கொங்கரா ஹீரோவை மாற்றிவிட்டார். சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பின்பு எடுக்கும் முடிவுகள் சரவெடியாகத்தான் இருக்கின்றன. அதன்பின்னர் 1964ம் வருடம் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையக்கருவாக வைத்து சுதா கொங்கரா ஒரு கதை எழுதியிருந்தார்.

தற்போது இதில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டது. சுதா கொங்கரா - சிவகார்த்திகேயன் காம்போ மிகப்பெரிய பிளஸ் ஆக மாறியுள்ளது. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், சிவகார்த்திகேயன் படும் சுறுசுறுப்புடன் படத்தில் நடித்து வியப்பை தருவதாக படக்குழுவினர் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

சிம்புவுக்கு குட்பை: சூர்யா படத்தை தொடர்ந்து தற்போது சிம்பு நடிக்க இருந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. என்னப்பா இது சிவகார்த்திகேயன் வளர்ச்சி அசூரத்தனமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2018 படத்தை இயக்கிய ஜேட் அந்தோணி ஜோசப் சிம்புவிடம் ஒரு கதையை சொல்லி ஓகே சொல்லியிருந்தார். ஆனால், அந்தப்படத்திற்கான வேலைப்பாடுகள் தள்ளி போனது. இந்த கதையை ஏஜிஎஸ் நிறுவனத்திடம் அந்தோணி சொல்ல கதை பிடித்து போனது.

Sivakarthikeyan next movie sivakarthikeyan parasakthi

வயிற்றெரிச்சல்: ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அல்வா சாப்பிடுவது போல் சிவகார்த்திகேயனிடம் ஏற்கனவே கால்ஷீட் வாங்கி வைத்திருப்பதால் இப்படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உத்தரவு கிடைத்துவிட்டதாம். பராசக்தி, மதராஸி படத்திற்கு பிறகு சிம்பு நடிக்க இருந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. உச்ச நடிகர்கள் நடிக்க இருந்த படத்தில் சிவகார்த்திகேயன் உள்ளே நுழைந்து ஆட்டத்தை கலைக்காமல் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வருவதாகவும் பேச்சு அடிபடுகிறது. இருந்தாலும், இவரது வளர்ச்சி சிலருக்கு வயிற்றெரிச்சலை தருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X