Don Box office: முதல் நாளை முந்திய இரண்டாம் நாள் கலெக்ஷன்.. டான் படம் பார்க்க குவியும் மக்கள்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளியான டான் திரைப்படம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி உள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு படம் ரொம்பவே பிடித்துப் போய் விட்டது.

Recommended Video

Don Movie Review | Yessa ? Bussa ? | டான் | Sivakarthikeyan | S. J. Suryah | Filmibeat Tamil

அதுமட்டுமின்றி அம்மா, அப்பா என பெற்றோர்களுடன் சென்று பார்க்க வேண்டிய படமாக டான் மாறியுள்ள நிலையில், முதல் நாளை விட டான் படத்தின் இரண்டாம் நாள் வசூல் அதிகரித்துள்ளது.

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சமுத்திரகனி மற்றும் எஸ்.ஜே. சூர்யாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அழ வச்சிட்டாரு

அழ வச்சிட்டாரு

மகன் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக சைக்கிள் ஓட்டி வாழ்நாள் முழுவதும் வேலை பார்த்து தேய்ந்து போன நிலையில் இருக்கும் அப்பா சமுத்திரகனியின் அந்த பாதத்தை அப்படியொரு சூழ்நிலையில் பார்க்கும் சிவகார்த்திகேயன் உடைந்து அழும் காட்சிகளை பார்த்து தியேட்டரே கண் கலங்கி விட்டது தான் படத்திற்கான பலமாக மாறி உள்ளது. சமூக வலைதளங்களில் இளைஞர்கள் பலரும் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அழ வச்சிட்டாரு என டான் படத்தை பாராட்டி வருகின்றனர்.

காட்சிகள் அதிகரிப்பு

காட்சிகள் அதிகரிப்பு

விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல படம் என்கிற பெயரை எடுத்துள்ள டான் படத்திற்கு அனைத்து இடங்களிலும் தியேட்டர்கள் மற்றும் காட்சிகள் அதிகரித்து வருகின்றன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான டிக்கெட்டுகள் 90 சதவீதத்திற்கும் மேல் விற்றுத் தீர்ந்துள்ளதாகவும் பல திரையரங்குகள் சந்தோஷமாக டான் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பை குறிப்பிட்டு ட்வீட்களை போட்டு வருகின்றன.

மூன்று பேர்

மூன்று பேர்

டான் படத்தின் வெற்றிக்கு காரணமே படத்தில் உள்ள அந்த மூன்று பேர் தான் என படம் பார்த்த பலரும் பாராட்டி வருகின்றனர். சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சமுத்திரகனியின் உணர்வு பூர்வமான நடிப்பு தான் இந்த படத்தை பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கி உள்ளது என்றும் பிரியங்கா மோகன் நடிப்பும் அசத்தல் தான் என விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் மே 13ம் தேதி வெளியான நிலையில், முதல் நாளில் தமிழ்நாடு அளவில் 9.10 கோடி ரூபாய் வசூலை டான் படம் அள்ளி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இரண்டாம் நாளில் முதல் நாள் வசூலை விட அதிகம் வசூல் ஆகியிருப்பதாக தகவல்கள் வெளியாகி படக்குழுவை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளன.

20 கோடி வசூல்

20 கோடி வசூல்

சனிக்கிழமையான நேற்று 11.50 கோடி ரூபாய் வரை டான் திரைப்படம் தமிழ்நாட்டில் வசூல் செய்துள்ளதாக டிராக்கர்கள் கணித்துள்ளனர். இரண்டே நாட்களில் அதிரடியாக 20 கோடி ரூபாய் வசூலை டான் படம் அள்ளியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், உலகளவில் இரண்டு நாட்களில் 26 முதல் 28 கோடி வரை டான் வசூல் செய்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டான் படத்தின் பட்ஜெட் 35 முதல் 40 கோடி தான் என்கின்றனர்.

100 கோடியை எட்டுமா

100 கோடியை எட்டுமா

இதே வேகத்தில் அடுத்த பத்து நாட்களுக்கு படம் ஓடினால் டான் படமும் டாக்டர் படத்தை போலவே 100 கோடி வசூலை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார முடிவில் 40 கோடி வசூலை டான் படம் உலகளவில் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 3ம் தேதி கமல்ஹாசனின் விக்ரம் படம் ரிலீஸ் ஆகும் வரை டான் படத்திற்கு எந்தவொரு தடையும் இல்லாமல் படம் ஓடும் என்றும் டாக்டர் படத்தைத் தொடர்ந்து டான் திரைப்படமும் சிவகார்த்திகேயனுக்கு 100 கோடி வசூலை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X