பாஸான ‘டான்‘... முதல் நாள் வசூல்… எவ்வளவு தெரியுமா?
சென்னை : சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ள டான் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சூரி, சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என ஏராளமானோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

டான்
டான் திரைப்படம் நேற்று வெளியாகி பலரின் பாராட்டை பெற்றுள்ளது. குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர். கடைசி பெஞ்ச் மாணவனாக அவ்வளவாக படிக்காத அவர் அட்டகாசம் செய்கிறார். ஆனால், அப்பா சமுத்திரக்கனியோ ரொம்ப கண்டிப்பானவராக நடித்துள்ளார்.

3 விதமான கெட்டப்
டான் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று விதமான கெட்டப்பில் நடித்துள்ளார். பள்ளி மாணவனாகவும், கல்லூரி மாணவனாகவும், குடும்பஸ்தனாகவும், 3 வெவ்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். காதல், காமெடி , அப்பா சென்டிமென்ட் என தரமான படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி.

ஜலபுலஜங்
அது என்னமோ...என்ன மாயமோ தெரியல அனிருத், சிவகார்த்திகேயன் கூட்டணியில் பாடல்கள் வெளிவந்தாலே அது ஹிட்டாகி விடுகிறது. அதே போல இப்படத்தில், அனிருத் இசையில் 'ஜலபுலஜங்' மற்றும் 'பே' ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று திரையரங்கில் பலரை குத்தாட்டம் போடவைத்துள்ளது. இப்பாடலை அனிருத் மற்றும் ஜொனிடா காந்தி இணைந்து பாடியுள்ளனர்.
Recommended Video

முதல் நாள் வசூல்
டான் திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினத்தில் 'ஆர்.ஆர்.ஆர்' படம் வெளியானது. அதனால் டான் படம் மே மாதம் 13ஆம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று அறிவித்தபடி படம் வெளியானது. ரசிகர்கள் டான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுக்க டான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் ரூ. 9 கோடி வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











