கவினோட ஸ்டார் படத்துல வெயிட்டான சர்ப்ரைஸ் காத்திருக்கு.. அந்த பிரபல நடிகர் நடிச்சிருக்காரா?

சென்னை: இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகிறது. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் ஹரிஷ் கல்யாணை வைத்து ஸ்டார் படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார்.

ஆனால், தோனி தயாரிப்பில் உருவான எல்ஜிஎம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு காரணமாக ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தை தவற விட்டுவிட்டார் என தகவல்கள் வெளியாகன.

Sivakarthikeyan done a cameo in Kavin s Star movie buzz trending

கவினுக்கான படம்தான் ஸ்டார் அதனால்தான் ஹரிஷ் கல்யாண் விலக வேண்டிய சூழல் அதுவாகவே உருவாகியிருக்கிறது என்று ரசிகர்கள் படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு கூறி வருகின்றனர்.

யு சான்றிதழ்: கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் டிரைலரில் கெட்ட வார்த்தை ஒன்று இடம் பெற்றிருந்தது. அந்த வார்த்தையை பலரும் ரீல்ஸாகவும் எடிட் செய்தும் போட்டு வந்தனர். ஆனால், கடைசியில் சென்சார் போர்டு அதனை மியூட் செய்து விட்டு படத்துக்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளது.

நாளை பிரீமியர்: கவின் நடித்துள்ள ஸ்டார் படத்தின் பிரீமியர் வெளிநாடுகளில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் பத்திரிகையாளர்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கான சிறப்பு திரையிடல் 9-ஆம் தேதியான நாளை திரையிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மொட்டை மாடி பார்ட்டியில் ஜாலி: விஜே சித்துவின் மொட்டை மாடி பார்ட்டி யூடியூப் வீடியோவில் லுங்கிக் கட்டிக் கொண்டு பங்கேற்ற கவின் படுஜாலியாக அட்டகாசம் செய்து ஆட்டம் போட்ட காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ஸ்டார் படத்தின் புக்கிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ரசிகர்கள் முதல் நாளே படத்தை பார்க்க ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர்.

Sivakarthikeyan done a cameo in Kavin s Star movie buzz trending

சிவகார்த்திகேயன் கேமியோ: இளன் இயக்கத்தில் கவின், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஸ்டார் படம் உருவாகி உள்ள நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிகராகவே கேமியோ ரோலில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கோட் படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார் என்றும் கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்கப் போகிறார் என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. கவினுக்கு சிவகார்த்திகேயன் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் நிலையில், ஸ்டார் படத்தில் கேமியோ செய்திருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X