அமரன் படத்தை நினைத்து பயந்தேன்.. பாலாதான் நம்பிக்கை தந்தார்.. ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்

சென்னை: பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வணங்கான் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. கடந்த சில காலமாகவே பாலாவுக்கு ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அதேபோல் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆகியும் பெரும் திருப்புமுனை கிடைக்காமல் திண்டாடிவருகிறார் அருண் விஜய். அவரும் பாலாவும் முதன்முறையாக இணைந்திருப்பதன் காரணமாக இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

விக்ரமுக்கு வாழ்க்கை கொடுத்த படம் சேது. அந்தப் படத்தை இயக்கி எப்படி தனக்கு அடையாளத்தை கொடுத்தாரோ அதேபோல் தனது மகனுக்கும் அடையாளத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக அர்ஜுன் ரெட்டி படத்தை பாலாவை வைத்து ரீமேக் செய்து தனது மகனை அறிமுகம் செய்ய நினைத்தார் விக்ரம். அதன்படி வர்மா படத்தை இயக்கினார் பாலா. ஆனால் அந்தப் படத்தை பார்த்துவிட்டு ரிலீஸே செய்ய வேண்டாம் என்று முடிவு செய்து வேறு ஒரு இயக்குநரை மீண்டும் இயக்க வைத்தார் விக்ரம்.

sivakarthikeyan bala vanangaan

பலத்த சறுக்கல்: இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது. முக்கியமாக பாலா போன்ற சிறந்த படைப்பாளிக்கு இப்படி ஒரு நிலைமையா என்று பலரும் பேசினார்கள். இது ஒருபக்கம் இருக்க தனது மனைவியையும் பிரிந்தார் பாலா. அதனையடுத்து சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினார். படத்தின் ஒரு ஷெட்யூல் ஷூட்டிங்கும் முடிந்தது. ஆனால் சில காரணங்களால் படத்திலிருந்து சூர்யா விலகினார். இதுவும் பாலாவுக்கு ஒரு அவப்பெயராகவே பார்க்கப்பட்டது.

அருண் விஜய்யுடன் கூட்டணி: சூர்யா விலகியதைத் தொடர்ந்து அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை மீண்டும் ஆரம்பித்தார் பாலா. இதில் ரோஷினி பிரகாஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாச் இசையமைக்க சுரேஷ் காமாட்சியும், பாலாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். படமானது அடுத்த வருடம் பொங்கலுக்கு ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

பாலா 25: சூழல் இப்படி இருக்க வணங்கான் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதுமட்டுமின்றி பாலா திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதால் பாலா 25 நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்டது. இதில் சூர்யா, சிவக்குமார், மணிரத்னம், சிவகார்த்திகேயன், மிஷ்கின், சமுத்திரகனி, பாக்யராஜ், வேதிகா, மன்சூர் அலிகான், நித்திலன் சுவாமிநாதன், மாரி செல்வராஜ் என நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. விழாவில் சிவகார்த்திகேயன் பேசிய விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சிவகார்த்திகேயன் பேச்சு: விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், "தீபாவளிக்கு வெளியாகும் படங்களின் க்ளைமேக்ஸ் சோகமாக இருந்தால் படம் தோல்வியடைந்துவிடும் என்கிற பிம்பம் இங்கு இருக்கிறது. அதேபோல் அமரன் படத்தின் க்ளைமேக்ஸும் சோகமாக இருந்தது. படம் தீபாவளிக்குத்தான் ரிலீஸானது. இதன் காரணமாக அமரன் படம் தோல்வியடைந்துவிடுமோ என்று பயந்தேன். அதற்கு பிறகுதான் பாலா இயக்கிய பிதாமகன் படமும் சோகமான க்ளைமேக்ஸுடன் தீபாவளிக்கு ரிலீஸாகி மெகா ஹிட்டனது நினைவுக்கு வந்து நம்பிக்கையை தந்தது.

இரண்டு படங்களும்: பொங்கலுக்கு அஜித் நடித்த விடாமுயற்சி, அருண் விஜய் நடித்த வணங்கான் ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன. இரண்டு படங்களுக்குமே முதல் எழுத்து V. V என்றாலே வெற்றிதான். இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அடுத்த வருடம் நன்றாக தொடங்க வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அருண் விஜய்யின் வெற்றிக்கு அவரது உழைப்புதான் காரணம். வணங்கான் படம் அவருக்கு ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X