twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “அண்ணே இது ப்ரஸ்ணே.. பேன்ஸ் இல்ல..” இதுக்கு பேருதான் சாமர்த்தியம் சிவகார்த்திக்கேயன்!

    ரோபோ சங்கர் பேச்சால் ஏற்பட்ட சலசலப்பிற்கு மிஸ்டர் லோக்கல் செய்தியாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்தார் சிவகார்த்திக்கேயன்.

    |

    Recommended Video

    MR.lOCAL Audio launch: Robo Shankar: எங்களை நடிக்கவச்சு அழகுபார்த்தார் சிவா- ரோபோ ஷங்கர் பேச்சு

    சென்னை: மிஸ்டர் லோக்கல் பட விழாவில் சிவகார்த்திக்கேயனின் சாமர்த்தியமான பேச்சால் ரோபோ சங்கரால் ஏற்பட்ட சலசலப்பு முடிவுக்கு வந்தது.

    எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன், நயன் தாரா நடித்துள்ள படம் மிஸ்டர்.லோக்கல். இப்படம் வரும் வெள்ளியன்று ரிலீசாக இருக்கிறது.

    இந்நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களை நேற்று சந்தித்தனர். அப்போது பேசிய ரோபோ சங்கர், பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் ரோபோ சங்கர். அதாவது, ப்ரஸ் ஷோக்களில் காமெடி படங்களை யாரும் ரசித்துக் கை தட்டிப் பார்ப்பதில்லை என்றும், செய்தியாளர் சந்திப்பில் யாரும் கை தட்டுவதில்லை என்றும் தன் மனக்குமுறலை அவர் வெளிப்படுத்தினார்.

     இதுக்கு எதுக்கு டிரெஸ் போடணும்?: கலாய்த்தவர்களுக்கு பேட்ட நடிகை நெத்தியடி இதுக்கு எதுக்கு டிரெஸ் போடணும்?: கலாய்த்தவர்களுக்கு பேட்ட நடிகை நெத்தியடி

    பத்திரிகையாளர்கள் பதிலடி:

    பத்திரிகையாளர்கள் பதிலடி:

    அதற்கு பத்திரிகையாளர்கள் தரப்பில் இருந்து, ‘உங்கள் படங்களை, பேச்சை கைதட்டி ரசித்துக் கொண்டிருந்தால், நாங்கள் எப்படி குறிப்பெடுப்பது, செய்தி சேகரிப்பது' என விளக்கமளித்தனர். இதனால், மிஸ்டர் லோக்கல் செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது. ரோபோ சங்கரின் பேச்சு அங்கிருந்தவர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

    சிவா பேச்சு:

    சிவா பேச்சு:

    இதனை கவனித்த மேடையில் இருந்த சிவகார்த்திக்கேயன், தனது பேச்சில் மூலம் சூழ்நிலையை சகஜமாக்கினார். மைக் முன் நின்றதும், படத்தைப் பற்றி பேசுவதற்கு முன், பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாகவும், ரோபோ சங்கர் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் தன் பேச்சை அவர் தொடங்கினார்.

    பேன்ஸ் இல்ல பிரஸ்:

    பேன்ஸ் இல்ல பிரஸ்:

    "அண்ணே இங்க வந்திருக்கறவங்க பிரஸ்ணே.. நம்ம பேன்ஸ் இல்ல. பாவம் அவங்க ஒரு நாளைக்கு ரெண்டு மூணு படம், பிரஸ் மீட்னு போறாங்க. இது அவங்க வேலை. நாம் நமக்குப் பிடித்த படத்தை மட்டும் தான் பார்ப்போம். ஆனால் அவர்களுக்கு எல்லாப் படத்தையும் பார்த்தே ஆக வேண்டிய கட்டாயம். அவர்கள் கடமையை அவர்கள் அழகாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்" எனப் பேசினார் சிவகார்த்திக்கேயன்.

    சிவாவுக்கு பாராட்டு:

    சிவாவுக்கு பாராட்டு:

    இதனால் அங்கு நிலவிய மோதல் சூழ்நிலை மாறி, மீண்டும் சகஜமான சூழல் நிலவியது. தன்னுடன் நடித்த சக நடிகர் என்றாலும், அவரது பேச்சுக்கு பதிலடி தரும் விதமாக, பத்திரிகையாளர்களின் மனநிலையை உணர்ந்து பேசிய சிவகார்த்திக்கேயனை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.

    சாமர்த்தியம்:

    சாமர்த்தியம்:

    வரும் வெள்ளியன்று தன் படம் ரிலீசாக உள்ள நிலையில் தேவையில்லாமல் பத்திரிகையாளர்களின் பகையை சம்பாதித்துக் கொள்ள விரும்பாமல், மேடையிலேயே அப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு கண்ட சிவகார்த்திக்கேயனின் சாமர்த்தியத்தை என்னவென்று சொல்வது.

    English summary
    In the press meet of Mr.Local, actor Sivakarthikeyan through his clever remarks made a full stop to Robo Shankar's controversial speech about press persons.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X