விஜய் டிவி விஜே டு பிரைவேட் ஜெட் ஹீரோ.. அமரன் புரமோஷனில் சிக்ஸர் அடிக்கும் சிவகார்த்திகேயன்!

கோவை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை மறுநாள் அதாவது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள படம் அமரன். இப்படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட நான்கு கெட்டப்புகளில் தோன்றுகின்றார். படம் ரிலீஸ் ஆக இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் சிவகார்த்திகேயன் தொடங்கி படக்குழுவினர் மிகத் தீவிரமாக புரோமோசன்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையில் நடைபெறும் புரோமோசன் வேலைகளில் ஈடுபட, சிவகார்த்திகேயன் கோவைக்கு பிரைவேட் ஜெட்டில் வந்து இறங்கியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

sivakarthikeyan amaran

ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல், சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள படம் அமரன். அமரன், தீபாவளிக்கு அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் புரடெக்‌ஷன்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இந்த தீபாவளிக்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் ரிலீஸாகின்றது.

sivakarthikeyan amaran

வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றும் ஆப்ரேஷனுக்கு தலைமை தாங்கினார். பொதுமக்களை பத்திரமாக மீட்கும் போராட்டத்தில் அவர் தனது உயிரினைத் தியாகம் செய்தார்.

sivakarthikeyan amaran

பாராட்டு: ராணுவ மேஜரின் வாழ்க்கை வரலாற்றினை படமாக எடுத்ததால், இந்திய ராணுவத் தளவாடங்களுக்குச் சென்றே படப்பிடிப்பு நடத்தியது படக்குழு. படப்பிடிப்பின் போதே ராணுவ வீரர்களின் பாராட்டினை படக்குழு பெற்றது. அதேபோல் ராணுவ வீரர்களுக்கு என படக்குழு படம் ரிலீஸ்க்கு முன்னர் சிறப்பு திரையிடல் செய்தது. இதனைப் பார்த்த ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் படக்குழுவினரை பாராட்டினர்.

sivakarthikeyan amaran

இந்து ரெபேக்கா: அதேபோல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்ஹீஸ்-உம் கலந்து கொண்டார். அதேபோல், படக்குழுவினர் நடத்திய முதல் செய்தியாளர்கள் சந்திப்பிலும் அவர் கலந்து கொண்டார். அப்போது உலக நாயகன் கமல்ஹாசன், "ஒவ்வொரு வீட்டிலும் இவர்களைப் போன்ற தைரியமான பெண்கள் இருக்கின்றார்கள். இவர்கள் தைரியம் அனைவருக்கும் இருக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

பிரைவேட் ஜெட்: படம் ரிலீஸ்க்கு முன்னர் நடிகை சாய் பல்லவி மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என இருவரும், நாட்டுக்காக தங்களது உயிரையும் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவிடத்திற்குச் சென்று, வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். படத்தின் புரோமோசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகார்த்திகேயன் கோவையில் நடைபெற்ற புரோமோசனில் கலந்து கொள்ள பிரைவேட் ஜெட்டில் வந்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள், "விஜய் டிவி விஜே டு பிரைவேட் ஜெட் ஹீரோ" நம்ம சிவா கலக்குறாரே! என கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X