‘நயன்’... நாம கேட்கணும் நினைச்ச கேள்விக்கு சிவாவே நச்சுனு பதில் சொல்லிட்டாரே!

மிஸ்டர் லோக்கல் படத்தில் நயனின் கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார் சிவகார்த்திக்கேயன்.

Recommended Video

Actor Sivakarthikeyan: மிஸ்டர் லோக்கல் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும்?- வீடியோ

சென்னை: மிஸ்டர் லோக்கல் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது பற்றி சிவகார்த்திக்கேயன் பேசியுள்ளார்.

சிவகார்த்திக்கேயனும், நயன்தாராவும் ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் சேர்ந்து நடித்திருந்தனர். அப்படத்தின் ஆரம்பத்தில் நயன் பற்றிய காட்சிகள் பரபரப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால், போக போக அவரது கதாபாத்திரத்தின் கனம் குறைந்து, அவரும் மற்றவர்களைப் போல சும்மா பிரேமில் வந்து செல்வார்.

இது அவரது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள வேடமாகத் தேர்வு செய்து நடித்து வரும் லேடி சூப்பர்ஸ்டாரை இப்படி டம்மியாக்கி விட்டார்களே என்ற ஆதங்கம் அவர்களிடையே இருந்தது.

ரசிகர்கள் பயம்:

ரசிகர்கள் பயம்:

இந்த சூழ்நிலையில் மீண்டும் ராஜேஷ் இயக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக நயன் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. எனவே, தனது முந்தைய படத்தைப் போல, இப்படத்திலும் நயனின் கதாபாத்திரம் டம்மியாகி விடக் கூடாதே என்ற பயம் ரசிகர்களிடம் இருந்தது.

டீசரால் நிம்மதி:

டீசரால் நிம்மதி:

ஆனால், படத்தின் டீசரைப் பார்த்த போதே ரசிகர்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டது. நிச்சயம் படத்தில் நயனுக்கு கனமான பாத்திரமாகத் தான் இருக்கும் என்பது அதில் இடம் பெற்றிருந்த காட்சிகள் மூலம் தெரிய வந்தது. இந்நிலையில், அதனை தற்போது உறுதி செய்துள்ளார் சிவகார்த்திக்கேயன்.

சிவா விளக்கம்:

சிவா விளக்கம்:

'ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் நயனை சரியாகப் பயன்படுத்தவில்லையே என்ற கவலை இருந்தது. ஆனால், அந்தக் குறை தற்போது மிஸ்டர் லோக்கல் படத்தின் மூலம் தீர்ந்துள்ளது. இப்படத்தில் அவர் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்' என சிவகார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

மன்னன் ரீமேக்?

மன்னன் ரீமேக்?

அதோடு, மிஸ்டர் லோக்கல் படம் ரஜினி- விஜயசாந்தி நடித்த மன்னன் படத்தின் ரீமேக் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அப்படத்தின் ஜாலி வெர்சனாக இப்படம் இருக்கும் என்றும் சிவகார்த்திக்கேயன் கூறியுள்ளார். இதனால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X