சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன் தான் சூப்பர் ஹீரோ.. ஹீரோ டிரைலரை வெளியிட்ட சிவகார்த்திகேயன் ரசிகர்!
சென்னை: சிவகார்த்திகேயனின் ஹீரோ டிரைலர் இன்று சென்னை சத்யம் திரையரங்கில் பிரம்மாண்ட விழாவுடன் வெளியிடப்பட்டது.
சிவகார்த்திகேயனின் ஹீரோ டிரைலரை எந்த பிரபலம் வெளியிட உள்ளார் என பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், ஹீரோ கேமில் முதல் பரிசு வென்ற ஈரோட்டை சேர்ந்த சிவகார்த்திகேயன் ரசிகர் கோகுல் ஹீரோ டிரைலரை வெளியிட்டார்.
சக்திமானில் தொடங்கி சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன் தான் சூப்பர் ஹீரோ என முடியும் 2 நிமிடம் 17 நொடிகள் கொண்ட ஹீரோ டிரைலர் வேற லெவலில் இருக்கிறது.
நோ ஸ்மோக்கிங் கார்டு இல்லை
சினிமா படங்கள் வெளியாகும் முன் புகை பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு, மது அருந்துவது உடல் நலத்திற்கு தீங்கானது என்ற அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆனால், ஹீரோ படத்தில் அந்த அறிவிப்பு வெளியாகாது என்றும், அந்த அளவுக்கு படத்தை பார்த்து பார்த்து, ஒரு இடத்தில் கூட அது போன்ற காட்சிகள் இடம்பெறாத அளவுக்கு படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டிரைலரை வெளியிட்ட ரசிகர்
ஹீரோ டிரைலரை எந்த பிரபலம் வெளியிட உள்ளார் என பலரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், ஹீரோ கேமில் முதல் பரிசு வென்ற ஈரோட்டை சேர்ந்த சிவகார்த்திகேயன் ரசிகர் கோகுல் ஹீரோ டிரைலரை வெளியிட்டார்.

சக்திமான்
ஆர்ப்பாட்டம் இல்லாமல் பள்ளி வகுப்பறையில் அமைதியாக தொடங்கும் டிரைலரில், நீ யாராக விரும்புகிறாய் என ஆசிரியர் கேட்க ஒவ்வொருவரும் டாக்டர், எஞ்சினியர் என கூறுகின்றனர். ஸ்கூல் பேகில் சக்திமான் ஸ்டிக்கர்களை ஒட்டி வரும் சின்ன வயது சிவகார்த்திகேயன் கதாபாத்திரம், சக்திமான் போல சூப்பர் ஹீரோவாக வேண்டும் என்று சொல்வது மட்டுமின்றி, மாடியில் இருந்து சக்திமான் மாதிரி சுற்றி கீழே விழும் காட்சியுடன் சிவகார்த்திகேயன் என்ட்ரியாக டிரைலர் தொடங்குகிறது.

ஃபிராடு
மார்க் ஷீட், டிகிரி சான்றிதழ்களை போலியாக தயாரிக்கும் மோசடி மன்னனாக சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் இந்த படத்தில் வருவது போல டிரைலரில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஏதோ ஒரு சம்பவம், சிவகார்த்திகேயனை ஹீரோவாக மாற்றுகிறது. சில மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாடியில் இருந்து காட்சிகளும் டிரைலரில் இடம்பெற்றுள்ளன.

மாஸ் வில்லன்
பாலிவுட் நடிகர் அபய் தியோல், நான் படிப்பை வச்சு காசு பண்றவன் இல்லை, படிக்கிறவன வச்சி காசு பண்றவன் என அர்ஜுனிடம் சொல்லும் வசனத்தில் மாஸ் காட்டி நடித்துள்ளார். சிவகார்த்திகேயனை ஹீரோவாக அர்ஜுன் மாற்றும் காட்சிகளும் டிரைலரில் வரவேற்பை பெற்றுள்ளன.
யார் ஹீரோ
கிறிஸ்டோபர் நோலனின் தீவிர ரசிகரான பி.எஸ். மித்ரன், பேட்மேன் படத்தில் இருந்து இன்ஸ்பிரேஷனாகி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். டிரைலரின் இறுதியில் வரும் டயலாக்கில் சுயமா சிந்திக்கத் தெரிஞ்சவன் தான் சூப்பர் ஹீரோ என அவர் சொல்லும் வசனம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











