டாக்டர் படத்தின் 3வது பாடல் So Baby இன்று ரிலீஸ்.. ரசிகர்கள் ஆர்வம்!
சென்னை: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் டாக்டர்.
இந்த படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ளார், ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் பாடல் குறித்த அறிவிப்பை அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

படப்பிடிப்பு நிறைவு
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளிவரவுள்ள திரைப்படம் டாக்டர். நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, டப்பிங் பணிகள் முடிந்து, மார்ச் 26ம் தேதி ரிலீசுக்கு காத்துள்ளது.

சிவகார்த்திகேயன் வரிகளில்
இந்த படத்திலிருந்து முதலில் செல்லம்மா செல்லம்மா பாடலை வெளியிட்டு இருந்தனர். சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத், ஜோனிட்டா காந்தி ஆகியோர் இணைந்து பாடிய இந்த பாடல் வைரலானது, தற்போது
யூ டியூபில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.

மெல்லிய இசை
அதைத்தொடர்ந்து டாக்டர் படக்குழு நெஞ்சமே பாடலை வெளியிட்டது. அனிருத்தின் மெல்லிய இசையில், சிறப்பான மெலோடி பாடலாக நெஞ்சமே பாடல் அமைந்தது. இந்த பாடலுக்கு மோகன் வரிகள் எழுத, அனிருத் பாடலை பாடியிருந்தார். பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்று வெளியீடு
இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு படக்குழு So Baby பாடலை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டது. இந்த பாடலுக்கும் சிவகார்த்திகேயனே வரிகள் எழுதியுள்ளார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த பாடலின் மேல் ஆர்வம் கூடியுள்ளது.


Click it and Unblock the Notifications











