ஏய் இமான் தில்லு இருந்தா காரணத்த சொல்லு.. எங்க எஸ்கே அண்ணா மேல வீண் பழி போடாதே.. கொதிக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மீது பொறாமைப்பட்டுத் தான் இசையமைப்பாளர் டி. இமான் இப்படி இல்லாததையும் பொல்லாததையும் தற்போது பேசி தனது வன்மத்தை கக்கி வருகிறார் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் பொங்கி உள்ளனர்.

விஜய், அஜித், சூர்யாவை தொடர்ந்து கோலிவுட்டில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார் சிவகார்த்திகேயன்.

Sivakarthikeyan fans slams D Imman for his latest controversy interview

சாதாரண காமெடியனாக விஜய் டிவியில் அறிமுகமாகி கோலிவுட்டின் இளம் மாஸ் ஹீரோவாக மாறியுள்ள அவர் மீது அவதூறு பரப்பும் நோக்கில் டி. இமான் பேசியதை ரசிகர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.

சைலன்ட் மோடில் சிவகார்த்திகேயன்: இசையமைப்பாளர் டி. இமான் இப்படி வெளிப்படையாக நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார் என்கிற குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில், இதுகுறித்து இன்னமும் எந்தவொரு விளக்கமும் ட்வீட்டோ போடாமல் நடிகர் சிவகார்த்திகேயன் அப்படியே சைலன்ட் மோடில் உள்ளார். ஆனால், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் டி. இமானின் பேச்சை கடுமையாக கண்டித்து அவரை திட்டி சோஷியல் மீடியாவில் அனலை கிளப்பி உள்ளனர்.

டேய் இமான் உனக்கு தில்லு இருந்தா?: சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள், "டேய் இமான் உனக்கு தில் இருந்தா? என்ன மாதிரியான துரோகத்தை எங்க தங்கமான அண்ணன் சிவகார்த்திகேயன் உனக்கு செஞ்சாருன்னு வெளிப்படையா சொல்லு.. அதை விட்டு விட்டு ஏதோ ஒரு வன்மம் காரணமாக சிவகார்த்திகேயன் அண்ணா மீது வீண் பழி போட்டால் உன்னை சும்மா விட மாட்டோம் என விளாசி வருகின்றனர்.

Sivakarthikeyan fans slams D Imman for his latest controversy interview

விஜய் ரசிகர்கள் சப்போர்ட்: சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர் விஜய் ரசிகர்களும் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக, "உண்மை ஒரு நாள் வெல்லும்.. இந்த உலகம் உன் பெயர் சொல்லும்" என ட்வீட் போட்டு ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர்.

ரொம்ப நல்லவனா இருக்காத அண்ணா: சிவகார்த்திகேயன் அண்ணா நல்லவனா இரு.. ஆனா, ரொம்ப நல்லவனா இருக்காத.. அப்புறம் இந்த உலகம் உன்னை யூஸ் பண்ணிட்டு தூக்கிப்போட்டு விடும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவருக்காக பல ட்வீட்களை பதிவிட்டு டி. இமானை விளாசி வருகின்றனர். இந்த சர்ச்சைக்கு சிவகார்த்திகேயன் விரைவில் வாயை திறந்து முற்றுப்புள்ளி வைப்பார் என்றே தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X