வாவ்.. வருதப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி 7 வருஷம் ஆகிடுச்சாம்.. டிரெண்டாகும் #7YrsOfEvergreenVVS

சென்னை: சிவகார்த்திகேயனுக்கு செம மாஸான கமர்ஷியல் வெற்றி கொடுத்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

Recommended Video

ACTRESS PUJITHA | சூர்யா கூட நடிக்க ஆசை | V-CONNECT | FILMIBEAT TAMIL

அதனை கொண்டாடும் விதமாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் #7YrsOfEvergreenVVS என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்திருப்பார்.

செம ஜோடி பொருத்தம்

செம ஜோடி பொருத்தம்

நடிகர் அர்ஜுன் நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஹனுமான் ஜங்க்‌ஷன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான ஸ்ரீதிவ்யா, சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் லதா பாண்டியாக நடித்து தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் ஊதா கலரு ரிப்பனாக குடிபுகுந்தார். காக்கி சட்டை படத்திற்கு பிறகு ரசிகர்கள் இந்த நட்சத்திர ஜோடியை ரொம்பவே மிஸ் பண்றாங்க.. ஸ்ரீதிவ்யாவும் தான்.

7 வருஷம் ஆகிடுச்சு

7 வருஷம் ஆகிடுச்சு

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எம். ராஜேஷ் இந்த படத்திற்கு வசனங்கள் எழுதி இருந்தார். அவரது உதவி இயக்குநர் பொன்ராம் இயக்குநராக அறிமுகமான இந்த படம் சிவகார்த்திகேயன், சூரி, சத்யராஜின் கலாட்டா காமெடியில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது. 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சங்கத் தலைவர்

சங்கத் தலைவர்

கிராமப்புறங்களில் இப்படி எடக்கு மடக்கான சங்கங்களை உருவாக்கிக் கொண்டு லந்து செய்யும் இளைஞர்களின் கதையை த்ரில்லர் ஸ்டோரியாக சித்தரித்து, நகைச்சுவை, அழகான பாடல்கள் என அனைத்தையும் அதிகளவில் கலந்து கொடுக்கப்பட்ட படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

பவன் கல்யாணுக்கு புடிச்சுப் போச்சு

பவன் கல்யாணுக்கு புடிச்சுப் போச்சு

இசையமைப்பாளர் இமான், இந்த படத்திற்காக போட்ட அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் தான். "பார்க்காத.. பார்க்காத", "வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "இந்த பொண்ணுங்களே இப்படித்தான்", "என்னடா என்னடா" என அத்தனை பாடல்களும் ரசிகர்களை ரசிக்க வைத்தது. அதிலும் அந்த "ஊதா கலரு ரிப்பன் பாட்டு பட்டித் தொட்டி எங்கும் பிரபலம் ஆனது. சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண், தனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு அது தான்னு சொல்லி சிவகார்த்திகேயனை சிலிர்க்க வைத்திருந்தார்.

வசூல் மழை

வசூல் மழை

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பக்கா கமர்ஷியல் வெற்றியை இந்த படம் கொடுத்து இருந்தது. இளம் ஹீரோவாக சினிமாவில் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், ரஜினி முருகன் என தொடர்ந்து ஹிட்களை கொடுத்து வசூலில் முன்னணி நடிகர்களுக்கு டஃப் கொடுத்து, மாஸ் ஹீரோவாகவே மாற இந்த படம் தான் முக்கிய காரணம் என்றும் சொல்லலாம். இரண்டாம் பாகம் வந்தாலும், ரசிகர்கள் நிச்சயம் ஹேப்பியா பார்ப்பாங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X