Sivakarthikeyan: படம் ஓடுதோ இல்லையோ தீபாவளி பொங்கலுக்கு அட்டனன்ஸ் போடும் எஸ்.கே! இந்தவாட்டி அமரன்!
சென்னை: சினிமாவில் தீவிரமாக உழைப்பினையும் ஈடுபாட்டையும் செலுத்தினால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்பதற்கு சிவகார்த்திகேயனும் ஒரு உதாரணம். சிறிய கதாபாத்திரத்தில் சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன் அதன் பின்னர் கதாநாயகனாக உருவெடுத்தார். சின்னத்திரையில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய சிவகார்த்திகேயன், அதனை வெள்ளித்திரையிலும் அறுவடை செய்தார்.
ஜனரஞ்சகமான கதைகளில் நடித்து வந்த சிவகார்த்திகேயன் இன்றை வளர்ந்து வரும் கதாநாயகன் என்ற கட்டத்தைக் கடந்து, ஸ்டார் வேல்யு உள்ள கதாநாயகனாக மாறிவிட்டார். சண்டைக் காட்சிகளுக்காக மெனக்கெடுவது, நடனக் காட்சிகளுக்காக தனியாக க்ளாஸ்க்கே செல்வது என தன்னை மிகத் தீவிரமாக தயார்படுத்திக் கொண்டார்.

ஒருகட்டத்தில் ஆக்ஷன் படங்களில் அதிக அக்கறை செலுத்திய சிவகார்த்திகேயன் இன்றைக்கு ஒரு மாஸ் நடிகராகவே வலம் வந்துகொண்டு இருக்கின்றார். இவரது நடிப்பில் வரும் தீபாவளிக்கு அமரன் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர், தமிழ்நாட்டினைச் சேர்ந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மைய்யப்பருத்தியது. இந்தப் படத்தினைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் நடிப்பில் பக்கா ஆக்ஷன் படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் கதையை விஜய்காக முருகதாஸ் உருவாக்கினார் என கூறப்படுகின்றது.

தயாரிப்பு நிறுவனத்தின் நம்பிக்கை: தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் தீபாவளி பொங்கலுக்கு படங்களை ரிலீஸ் செய்கின்றார் என்றால் அவருக்கு அதற்கான வசூல் இருக்கும் என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் நம்புவதால் மட்டும்தான் தீபாவளி மற்றும் பொங்கல் நாட்களில் ரிலீஸ் செய்வார்கள். இது மட்டும் இல்லாமல் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும் நடிகர்கள் மட்டுமே தீபாவளி பொங்கலுக்கு படத்தினை ரிலீஸ் செய்து வந்தார்கள்.
தீபாவளி - பொங்கல்: இப்படியான நிலையில் தனது படம் வெற்றி பெறுகின்றதோ இல்லையோ தமிழ் சினிமாவில் தான் ஒரு தவிர்க்க முடியாத கதாநாயகன், கலெக்ஷன் உள்ள கதாநாயகன் என்பதை நிரூபிக்க தீபாவளி, பொங்கலுக்கு படங்களைத் தொடர்ந்து ரிலீஸ் செய்து வருகின்றார். கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளிக்கு பிரின்ஸ் படத்தினையும், இந்த ஆண்டு பொங்கலுக்கு அயலான் படத்தினையும், ஏற்கனவே ரிலீஸ் செய்திருந்தார். இதில் பிரின்ஸ் படம் அட்டர் ஃபிளாப். அயலான் படம் தோல்விப்படம் எனக் கூறிவிட முடியாது. இப்படியான நிலையில் தீபாவளிக்கு அமரனில் களமிறங்குகின்றார்.

அதிக தியேட்டர்களில்: படம் ஓடுகின்றதோ இல்லையோ தொடர்ந்து தீபாவளி பொங்கலுக்கு படங்களை ரிலீஸ் செய்து வருகின்றார். அந்த வரிசையில் தற்போது அமரன் படமும் இணைந்துள்ளது. அமரன் படத்தினை ரெட் ஜெயிண்ட் மூவீஸ் ரிலீஸ் செய்வதால் தமிழ்நாடு முழுவதும் அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்புள்ளது.

விடாமுயற்சி: மேலும் அமரன் படத்தின் கதை உண்மை வரலாற்றினை மைய்யமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என படக்குழு நம்புகின்றது. இதனால் படத்திற்கு அதிகப்படியான குடும்ப ரசிகர்கள் நல்ல வரவேற்பினைக் கொடுப்பார்கள் என்பதால் இதனைத் திட்டமிட்டே படக்குழு தீபாவளியை குறிவைத்துள்ளது. ரெட் ஜெயண்ட் அமரன் படத்தினை ரிலீஸ் செய்வதால், தீபாவளிக்கு விடாமுயற்சி ரிலீஸ் ஆகாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.



Click it and Unblock the Notifications











