அடுத்த ரவுண்டுக்கு ரெடியான SK.. தேர்தல் முடிந்ததுமே.. ரிசல்ட் வரைக்கும் எல்லாம் பொறுமை இல்லையாம்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கடைசி படம் பராசக்தி. பொங்கலுக்கு ரிலீஸ் ஆன இந்த படம் வசூல் ரீதியாக 100 கோடிகளை வசூலித்தது. அதேபோல், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கடைசி படம் தாய் கிழவி. இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் சுமார் 80 கோடிகள் வரை வசூலித்ததாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார்.
தனது தயாரிப்பில் உருவான தாய் கிழவி படத்தின் இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள சேயோன் படத்தில் கமிட் ஆகி உள்ளார். இந்த படம் சிவகார்த்திகேயனின் 26ஆவது படமாக உருவாக உள்ளது. இந்த படத்திற்கும் கமல்ஹாசனின் விருமாண்டி படத்திற்கும் தொடர்பு உள்ளது என்றும் கூறப்பட்டது. இது தொடர்பாக இயக்குநர் சிவகுமார் முருகேசனும் விருமாண்டி படத்தின் மையக் கதைக்கும் சேயோன் படத்திற்கும் தொடர்பு உள்ளது என்று கூறினார்.

சேயோன் படத்தின் ப்ரோமோ வீடியோ ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதுவும் குறிப்பாக, நடிகர் விஜய் ரசிகர்கள் இணையத்தில், சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தை மோசமாக விமர்சித்தது மட்டுமல்லாமல், அவரையும் அவரது குடும்பத்தினரையும் மோசமாக விமர்சித்தனர் என்று எழுந்த குற்றசாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இருந்தது என்று பலரும் தெரிவித்தனர்.
தமிழ்நாடு தேர்தல்: இந்நிலையில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் விஜய் மற்றும் அவரது தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் என்று இணையத்தில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல், மே 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அதாவது வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

சேயோன்: இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்தது சில நாட்களில் அதாவது ஏப்ரல் 27ஆம் தேதி சிவகார்த்திகேயனின் சேயோன் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலைக் கேள்விப்பட்ட பலரும், தேர்தல் முடிந்ததும் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தின் படிப்பை தொடங்குகிறாரே என்று பதிவிட்டு வருகிறார்கள். மேலும் சிலரோ சிவகார்த்திகேயன் இந்த ஆண்டில் இன்னும் படங்களிலேயே நடிக்கத் தொடங்கவில்லை, அப்படி இருக்கும் போது அவர் எதற்காகவும் காத்திருக்காமல் நடிக்கத் தொடங்குவதுதான் சரி என்றும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications